முந்தய பக்கம்

6 பேருக்கு நம்பிக்கை நாயகி விருது

10 Mar 2026, 3:51 pm
6 பேருக்கு நம்பிக்கை நாயகி விருது
<p><strong>6 பேருக்கு நம்பிக்கை நாயகி விருது</strong></p> <p>திருப்பூர், மார்ச் 10- &nbsp;சம ஊதியம், வாக்குரிமை மற்றும் சுயமரியாதைக்காண போராட்டத்தின் வெற்றியின் நாளாக கொண்டாடப்படும் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு சினேகா சமூகப்பணி &nbsp;சங்கம் சார்பில் காங்கேயத்தில் ஆறு சாதனை பெண்களுக்கு &nbsp;நம்பிக்கை நாயகி விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், பெண் உரிமையை நிலை நாட்டுவதன் &nbsp;முக்கியத்துவம் குறித்தும், பெண் சுதந்திரம் எதில் உள்ளது &nbsp;என்பதை குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது. மேலும், &nbsp;தன்னம்பிக்கையுடன் வரலாறு படைத்த ஆறு சாதனை &nbsp;பெண்களுக்கு நம்பிக்கை நாயகி விருது அண்மையில் &nbsp;வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் &nbsp;நடைபெற்றது. இவ்விழாவில் நிர்வாகிகள் அனுஷ்கா, சாந்தா, வழக் கறிஞர் ஜீவ லட்சுமி, இந்து அறநிலையத்துறை செயலர் கே. பால்ராஜ் காங்கேயம் நகராட்சி ஆணையாளர் மற்றும் கமல வேணி காங்கேயம் நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட &nbsp;300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அனைவ ருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram