புதுக்கோட்டையில் 5ஆவது ‘உலகத் தமிழ் ஹைக்கூ’ மாநாடு 43 நூல்கள் வெளியீடு ; விருதுகள் வழங்கல்
18 May 2026, 10:55 pm

புதுக்கோட்டையில் 5ஆவது ‘உலகத் தமிழ் ஹைக்கூ’ மாநாடு 43 நூல்கள் வெளியீடு ; விருதுகள் வழங்கல்

புதுக்கோட்டையில் 5ஆவது ‘உலகத் தமிழ் ஹைக்கூ’ மாநாடு 43 நூல்கள் வெளியீடு ; விருதுகள் வழங்கல்இயக்

கம் ஆகியவற்றின் சார்பில் 5ஆவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலை மை வகித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா தொடக்க உரையாற்றினார்.

கவிஞர் அமுதபாரதி, தமுஎகச மாநில துணைத் தலைவர் நா.முத்துநிலவன், கா.ந.கல்யாணசுந்தரம், முதுவை ஹிதா யத் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டின் நோக்கம் குறித்து கவிஞர் மு.முருகேஷ், கடந்து வந்த பாதை பற்றி நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். ‘தூண்டில்’ மாநாட்டுச் சிறப்பிதழை ஐபிஎஸ் அதிகாரி மணி சண்முகம் வெளியிட, வாசகர் பேரவையின் செயலர் பேரா.சா.விஸ்வநாதன் பெற்றுக் கொண்டார்.

ஹைக்கூ பகிர்வு அரங்கம், அயலகப் பகிர்வரங்கம், அனு பவப் பகிர்வரங்கம் ஆகியவை நடை பெற்றன

தொடர்ந்து உலகம் முழுவ தும் இருந்தும் வந்திருந்த கவிஞர் களின் 43 ஹைக்கூ நூல்கள் வெளி யிடப்பட்டன.

விருதுகள் வழங்கல் கவிஞர் தங்கம் மூர்த்திக்கு ஹைக்கூ பேரொளி விருதும், மலேசியா ந.

பச்சைபாலன், அந்தமான் செந்தில் குமார், சிங்கப்பூர் செலுகை சி.பழனி வேல், இலங்கை முகமது இர்ஷாத், மலேசியா மகேந்திரன் நவமணி, மலே சியா சிவா லெனின் ஆகியோருக்கு, ஹைக்கூ சுடரொளி விருதுகளும் வழங்கப்பட்டன.

உலகம் யாவையும் ஹைக்கூ என்ற தலைப்பில் கவிஞர் தங்கம் மூர்த்தி நிறைவுரை நிகழ்த்தி னார்.

முன்னதாக கவிஞர் மகா சுந்தர் வரவேற்றார். சு. பீர்முகமது நன்றி கூறினார்.