திருவள்ளூரில் 5 வது புத்தக திருவிழா துவக்கம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>திருவள்ளூரில் 5 வது புத்தக திருவிழா துவக்கம்</strong></p>
<p>திருவள்ளூர், பிப் .14- திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதா னத்தில் (ஆர்டிஓ அலுவலகம் எதிரில்) வெள்ளியன்று (பிப் 13) மாவட்ட நிர்வாகம், பொது நூலகத் துறை மற்றும் பபாசி இணைந்து நடத்தும் 5வது திருவள்ளுர் புத்தகத் திருவிழாவை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), துரைசந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட வருவாய் அலு வலர் ச.சுரேஷ். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் வை.ஜெயக்குமார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் எஸ்.வைரவன், மாவட்ட நூலக அலுவலர் சரஸ்வதி மற்றும் பல்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
