முந்தய பக்கம்

சிதம்பரம் கிளை நூலகத்தில் 58-வது தேசிய வார விழா

27 Nov 2025, 3:11 pm
சிதம்பரம் கிளை நூலகத்தில் 58-வது தேசிய வார விழா
<p>சிதம்பரம், நவ.27- சிதம்பரம் முழுநேர கிளை நூலகத்தில் 58 வது தேசிய நூலக வார விழா மாவட்ட மைய நூலகம் மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் நூலக வாசகர் வட்டம் ஆகியோர் இணைந்து கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். &nbsp;சங்கத்தின் மண்டல துணை ஆளுநர் புகழேந்தி, சாசன தலைவர் முகமது யாசின், &nbsp;முன்னாள் தலைவர் கிரீடு நடனசபாபதி, வாசகர் வட்ட தலைவர் சந்திரசேகரன், துணை தலைவர் சிவாகண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மைய நூலக அலுவலர் முருகன், சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம், ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் கஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற நூலகங்களில் பணியாற்றும் 27 நூலகர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் விருதுகள் வழங்கி &nbsp;கவுரவிக்கப்பட்டனர். &nbsp; விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் கோவிந்தராஜன், மதியழகன், சிதம்பரம் கிளை நூலகர்கள் அருள், சிவப்பிரகாசம்,சங்கத்தின் சாசன தலைவர் முகமது யாசின், ஓவியர் கர்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram