வெண்மணி தியாகிகள் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
26 Dec 2025, 4:32 pm
<p><strong>வெண்மணி தியாகிகள் 57 ஆம் ஆண்டு நினைவஞ்சலி </strong></p>
<p>இராமநாதபுரம், டிச.26- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழுவின் சார்பாக லீலாவதி நகர் கிளையில் வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வட்டாரக்குழு உறுப்பினர் ஆர்.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிநாததுரை, வட்டார குழு செயலாளர் இ.க.தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இராமநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 57 ஆவது வெண்மணி தியாகிகளின் நினைவஞ்சலி கூட்டம் மாவட்டதலைவர் எம்.முத்துராமு தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் வி.மயில்வாகணன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.சிவாஜி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். திருவல்லிபுத்தூர் அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் தேவதானம் மற்றும் திருவல்லிபுத்தூர் பகுதிகளில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் தேவதானத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . திருவில்லிபுத்தூர் கட்சி அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
