தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

31 Jan 2026, 5:27 pm
வாய்ப்பு வாசல்

ஆர்பிஐ-இல்  572  காலிப்  பணியிடங்கள்

ஒன்றிய அரசின் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜனவரி 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சமாக 25 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் Reasoning, General English,  General Awareness, Numerical Ability ஆகிய பாடங்கள் இடம்பெறும். இந்த பணியிடத்திற்கு பொது, ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.450, எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுவிபரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.  விண்ணப்பிக்கக் கடைசி தேதி : பிப்ரவரி 4, 2026.

இந்திய கடற்படையில் வேலை

இந்தியப் பாதுகாப்புத் துறை யின் கீழ் இயங்கி வரும் ஒரு பிரிவான இந்தியக் கடற்படையில் (Indian Navy) பல்வேறு பிரிவுகளில் அதிகாரி பணியிடங்களுக்கான 260 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளன. இதற்கான  வேலை வாய்ப்பு விண்ணப்பம் வெளியாகியுள்ளது. B.E/B.Tech/M.Sc/ MBA/ MCA  உள்ளிட்ட ஒரு பிரிவில் பட்டம்  பெற்றிருக்க வேண்டும். இப்பணி களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 2, 2002 முதல் ஜுலை 1, 2007 ஆகிய தேதிகளுக்கு இடை யில் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். குறிப்பு: NCC பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இது குறித்த முழுவிவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 24, 2026.

நபார்டு வங்கியில் பணி

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நபார்டு (தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி) வளர்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்பவிருக்கிறது.  இதற்காக வெளியிடப்பட்ட அறி விக்கையில் 162 காலிப்பணியிடங்கள் நிரப்பவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தப் பணியிடங்கள் மாநில வாரியாக நிரப்பப்படும்.  21 வயது முதல் 35 வயது வரை யிலானவர்கள் இதற்கு விண்ணப்பிக்க லாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி உண்டு. குறைந்தபட்சப் பட்டப்படிப்பு அவசியமாகும். இருகட்டமாகத் தேர்வு  நடைபெறும். முதல்நிலைத் தேர்வு பிப்ர வரி 21, 2026 அன்றும், முதன்மைத் தேர்வு ஏப்ரல் 12, 2026 அன்றும் நடத்தப்படும். இருகட்டத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுமையங்கள், விண்ணப்பம் நிரப்பும்முறை உள்ளிட்ட பல்வேறு விபரங்களுக்கு www.nabard.org/career என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி  : 3, 2026.

சென்ட்ரல் வங்கியில் அதிகாரிகள்

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 350 சிறப்புத்துறை அதிகாரிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. அந்நியச் செலாவணி அலுவலர் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்நியச் செலாவணி அலுவலருக்கு குறைந்தபட்ச வயதாக 25உம், விற்பனை பிரிவு அலுவலருக்கு 22உம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் அதிகபட்ச வயது 35 ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதில் அரசு விதிமுறைகளின்படி தளர்ச்சி இருக்கும்.  பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் எழுத்துத் தேர்வும், ஏப்ரலில் நேர்முகத் தேர்வும் நடைபெறும். பணி அனுபவமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முழுவிபரங்களுக்கு www.centralbank.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி பிப்ரவரி 3, 2026.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.