முந்தய பக்கம்

57 ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

17 Nov 2025, 3:10 pm
57 ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
<p><strong>57 ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்</strong></p> <p>சென்னை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் &nbsp;உள்பட 57 ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நின்று &nbsp;செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபலமான மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலுக்கு தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்நிலையில் இரு முடி மற்றும் தைப்பூசம் நிகழ்வையொட்டி அந்த வழியாகச் &nbsp;செல்லும் ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று &nbsp;செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி &nbsp;வரை பக்தர்களின் வசதிக்காக மேல்மருவத்தூர் ரயில் நிலை யத்தில் நின்று செல்லும் 57 ரயில்களின் விவரங்களை ரயில்வே &nbsp;வெளியிட்டுள்ளது. லோகமான்ய திலக் - காரைக்குடி எக்ஸ்பிரஸ், சென்னை - &nbsp;மதுரை இடையே செல்லும் வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - ஹஸ்ரத் இடையே திருக்குறள் &nbsp;எக்ஸ்பிரஸ், சென்னை - செங்கோட்டை இடையே செல்லும் &nbsp;பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை - &nbsp;கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், &nbsp;சென்னை - மன்னார்குடி எக்ஸ்பிரஸ், சென்னை - தஞ்சாவூர் &nbsp;உழவன் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா &nbsp;எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram