தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.5,600 கோடி இணையவழி நிதி மோசடி 18 மாநிலங்களில் பரவியிருந்த கும்பல் சிக்கியது

yesterday
ரூ.5,600 கோடி இணையவழி நிதி மோசடி 18 மாநிலங்களில் பரவியிருந்த கும்பல் சிக்கியது

ரூ.5,600 கோடி இணையவழி நிதி மோசடி 18 மாநிலங்களில் பரவியிருந்த கும்பல் சிக்கியது

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷதாப். இவர் ஷாஜேப் வாரிஸ், சல்மான்மற்றும் ஆரிப் ஆகிய மூவரும் தன்னிடம்ரூ.25 லட்சம் மோசடி செய்துவிட்டதாகக் கூறி ஆகஸ்ட் 19 அன்று உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறை, நாட்டையே உலுக்கிய பெரும்பின்னணியைக் கண்டறிந்து, அதிர்ச்சிமிக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி உத்தரப்பிரதேச காவல்ஆணையர் ரகுபீர் லால் கூறியதாவது: முகமது ஷதாப் மோசடி புகார் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியாக 10,000 வங்கிக் கணக்குகளைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 14 வெவ்வேறு வங்கிகளில் இந்தக் கும்பலுக்குச் சொந்தமான 77 போலி கணக்குகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கணக்குகள் வழியாகச் சுமார் ரூ.5,600 கோடி வரைபணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோசடிக்குப் பின்புலத்தில் சில வங்கி ஊழியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அரசுவங்கியின் சர்வேயர் ஒருவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் மோசடி கும்பலின் உறுப்பினர் ஆரிப்என்பவருக்கு ரூ.1.75 கோடி கடன் வழங்கி, அதற்குப் பதிலாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது என அவர் கூறினார்.

ஆனால் இது என்ன வகை மோசடி?பிட்காயினா? கிரிப்டோகரன்சி மோசடியா? என உத்தரப்பிரதேச காவல்துறை தெளிவாக அறிக்கை வெளியிடவில்லை. எனினும் 18 மாநிலங்களில் ரூ.5,600கோடிஇணையவழி நிதி மோசடி நிகழ்ந்துள்ளதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.