தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் மனுக்கள் தாக்கல்

27 Jun 2026, 10:03 pm
தேர்தல் வெற்றியை எதிர்த்து  55 தேர்தல் மனுக்கள் தாக்கல்

தேர்தல் வெற்றியை எதிர்த்து 55 தேர்தல் மனுக்கள் தாக்கல்

சென்னை, ஜூன் 27 - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா லின் உள்பட பல எம்எல்ஏக்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை 55 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த தேர்தல் களை விட அதிகமான எண் ணிக்கை என்பது குறிப்பிடத் தக்கது. 2021-இல் 13 வழக்கு களும், 2016-இல் 23 வழக்கு களும், 2011-இல் 12 வழக்கு களும் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக் குள் தாக்கல் செய்ய வேண்டிய தேர்தல் வழக்கு களுக்கான கெடு ஜூன் 18 அன்றுடன் முடிவடைந்தது. முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து மூன்று வழக்குகளும், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஒரு வழக்கும் என மொத்தம் நான்கு வழக்கு கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சேப்பாக்கம் - திரு வல்லிக்கேணி தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதி ராகவும் ஒரு வழக்கு தொட ரப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை யன், மரிய வில்சன் ஆகி யோருக்கு எதிராகவும் தனித் தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் தோல்விய டைந்த முன்னாள் அமைச் சர் அன்பில் மகேஸ் மற்றும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திருப்பத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோரும் தங்களை வென்ற வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் வெற்றியை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் எண்ணிடப்பட்ட பின்னர் தலைமை நீதிபதிக்கு அனுப் பப்பட்டு ஒப்புதல் பெற்ற பின், தேர்தல் வழக்கு விதி களின்படி விசாரிப்பதற் கான தனி நீதிபதி நிய மிக்கப்படுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.