தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை 53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை

11 May 2026, 10:12 pm
கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை  53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை

கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை 53 ஆயிரம் தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலை

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளி யிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான தரவு களின்படி, 50 ஆயிரத்துக்கும் அதிகமான தினக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள் ளது தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான மொத்தம் 1,70,746 தற்கொலைகளில், 52,910 தினக்கூலித் தொழிலா ளர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இது நாட்டில் தற்கொலை செய்து கொண்ட மொத்த நபர்களில் சுமார் 31 சதவிகிதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக 22,113 இல்லத்தரசிகள், 20,184 இதர நபர்கள், 17,886சுயதொழில் செய்பவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் தினக்கூலித் தொழி லாளர்கள் 28 சதவிகிதமாக இருந்தனர்.

கடந்த பத்தாண்டுகாலத் தரவுகளை ஒப்பிடும்போது தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஆகிய மூவருமே தற்கொலை செய்து கொள்ளும் அளவு அதிகரித்து வருகின்றது.

2015 இல் தற்கொலை செய்து கொண்டவர்களில் தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை 17.8 சதவிகித மாக இருந்தது.

இந்த அளவு 2019 இல் 23.4 சதவிகிதமாக வும், 2024 இல் 31 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு முதலிடம் மாநில வாரியான புள்ளிவிவரங்களின்படி, தினக் கூலித் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

தேசிய அளவில் தற்கொலை செய்து கொண்ட ஐந்து தினக்கூலி தொழி லாளிகளில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக உள்ளார்.

தமிழ் நாட்டுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 95 சதவீதத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறை வாக வருமானம் ஈட்டுபவர்கள் என்பது வேதனையான விஷயம்.

குறிப்பாக அதில் 62.9 சதவிகிதத்தினர் அதாவது 1,07,455 நபர்கள் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் கடன் தொல்லை, வேலை யின்மை, வறுமை போன்ற குடும்பப் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.