திருப்பூரில் 5000 விவசாயிகள் பங்கேற்கும் தர்ணா!
4 Jan 2026, 5:55 pm
<p><strong>திருப்பூரில் 5000 விவசாயிகள் பங்கேற்கும் தர்ணா!</strong></p>
<p>அவிநாசி, ஜன.4- விவசாயிகள் விரோத ஒன்றிய அரசைக் கண்டித்து, திருப்பூரில் 5 ஆயிரம் விவ சாயிகள் பங்கேற்கும் தர்ணா நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவி நாசியிலுள்ள பி.ராமமூர்த்தி நினைவகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மேற்கு மண்டல மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் சனியன்று நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், விவ சாயிகள் பெற்றுள்ள கடனை ஒரே முறையில் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தி பொருளுக்கு சி2+50 அடிப் படையில் கட்டுப்படியான விலை கிடைக்க உத்தரவாத சட்டம் இயற்ற வேண்டும். மின் சார மசோதா – 2020 மற்றும் விதைச்சட்டம் – 2025யை திரும்பப்பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ‘விக்சித் பாரத் - ஜி ராம் ஜி’ என மாற்றியதை திரும்பப்பெற வேண்டும். வன உரிமைச் சட்டம் - 2006யை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.4 ஆம் தேதி திருப்பூரில் மண்டல அளவில் 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கும் பெருந்தி ரள் தர்ணா நடத்துவது என முடிவு செய்யப் பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் சங்கத் தின் மாநில துணைச்செயலாளர் பி.பெரு மாள் மற்றும் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
