பண்ணைகளில் 5 ஆயிரம் கோழிகள் பலி
4 Nov 2026, 1:14 am

பண்ணைகளில் 5 ஆயிரம் கோழிகள் பலி

கடலூர், நவ.3-கடலூர் மாவட்டத்தில் திருச்சோபுரம், நடுத்திட்டு, தம்மனாம்பேட்டை, நொச்சி காட, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணை களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கடந்த இரண்டு, மூன்று நாட்களில் கொத்துக் கொத்தாக உயிரிழந்துள்ளன. தீபா வளி விற்பனைக்காக வளர்க்கப்பட்ட கோழிகள் உயிரிழந்ததால் பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.

இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்கு நர் முருகவேல் தலைமை யில், உதவி இயக்குநர் வேங்கடலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர். கோழி கள் வளர்க்கப்படும் முறை, சுற்றுப்புறச் சுகாதாரம், தீவனம், குடிநீர்

ஆகியவற்றை ஆய்வுசெய்ததுடன், உயிரிழப்புக் கான காரணத்தைக் கண்ட றிய மாதிரிகளையும் சேகரித்தனர்.

இதுகுறித்து இணை இயக்குநர் முருகவேல் கூறுகையில், கோழிகள் உயிரிழந்ததற்கான கார

ணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. தொற்றுநோய் பாதிப்பா அல்லது பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பா என்பது பரி சோதனை முடிவு களுக்குப் பின்னரே தெரியவரும். பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை; பொது மக்கள் அச்சப்படத் தேவை யில்லை என்றார்.