சூறாவளி காற்றால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
7 May 2026, 11:41 pm
<p><strong>சூறாவளி காற்றால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை</strong></p><p>கோபி, மே 7- கோபி அருகே உள்ள சிறுவலூர் பகுதியில் புத னன்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை யால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கதளி, நேந்திரன், செவ் வாழை, பூவன், தேன் வாழை உள்ளிட்ட ரகங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவ சாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்ற னர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயி லின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கியது. இந்நிலையில், சிறுவலூர், மல்லநாயக்கனூர், வெள்ளாங் கோவில், கொளப்பலூர் உள்ளிட்ட பகுதி களில் புதனன்று இரவு சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடை விடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் விவசாய நிலங்களில் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங் கள் முறிந்து சேதமானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை யினரிடம் விவசாயிகள் தெரிவித்தபோது, கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றிருந்து, காப்பீடு செய்திருந்தால் மட்டுமே நிவார ணம் கிடைக்கும் என தெரிவித்தனர். தங்களது சொந்த செலவில் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து வாழை சாகுபடியை மேற் கொண்ட விவசாயிகளுக்கு, கூட்டுறவு சங் கங்களில் கடன் பெற்று காப்பீடு செய்தி ருந்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.</p>
