தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
17 Feb 2026, 3:36 pm
<p><strong>தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் 3 ஆண்டுகளில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை</strong></p>
<p>தஞ்சாவூர், பிப்.17- தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டு களில் 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது என அக்கல்லூரி முதல்வர் எம். பூவதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், “இந்த மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த 2022 நவ.5 ஆம் தேதி முதல் முதலாக வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது, 50 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிப்.7 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதில், மூளைச்சாவு அடைந்த நோயாளி யிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டு, இம்மருத்துவ மனையில் சிறுநீரகம் செயலிழந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி நலமுடன் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், 50 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. இதில், உயிருள்ள உறவினர்களிடமிருந்து 7 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மூளைச்சாவு அடைந்த 43 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவற்றில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 27 கொடையாளர்க ளிடமிருந்து சிறுநீரக உறுப்பு தானமாக பெறப்பட்டது. மேலும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் அரசு மருத்துவ மனையிலிருந்து 16 சிறுநீரகங்கள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு, ரத்த சுத்திகரிப்பில் உள்ள நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல்துறை சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, மயக்கவியல் துறை மருத்துவர்கள் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி பாராட்டத்தக்கது’’ என்றார். அப்போது, பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உடனிருந்தனர்.</p>
