பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி பலி
20 Dec 2025, 2:23 pm

பள்ளியில் மயங்கி விழுந்த 5 வயது சிறுமி பலி

சிவகங்கை, டிச.20- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியரின் மகள் தேஜாஸ்ரீ (5), மானாமதுரை மேல்கரையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், சனியன்று காலை பள்ளியில் தேஜாஸ்ரீ திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடனடியாக அவரை மானாமதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானா மதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், உயிரிழந்த சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.