தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

16 Dec 2025, 6:10 pm
சென்னை விரைவு செய்திகள்

அரூர் வட்டத்தில் சித்தேரி உள்ளிட்ட 5 கிராமங்கள் இணைப்பு

தருமபுரி, டிச.16- பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தி லுள்ள சித்தேரி, சின்னாங்குப்பம் உள் ளிட்ட 5 வருவாய் கிராமங்கள் அரூர்  வருவாய் வட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி வருவாய் வட்டத்தில் மலைக் கிராமமான சித்தேரி வரு வாய் கிராமத்தில் 63 குக்கிராமங் கள் உள்ளன. இதேபோல, சின்னாங் குப்பம், கோபிச்செட்டிப்பாளையம், எஸ்.அம்மாபாளையம், கொளகம் பட்டி ஆகிய நான்கு வருவாய் கிரா மங்களும் பாப்பிரெட்டிப்பட்டி வரு வாய் வட்டத்தில் அமைந்துள்ளன. இந்த வருவாய் கிராமங்களைச் சேர்ந்த குக்கிராம மக்கள், வருவாய்த் துறை தொடர்பான ஆவணங்களை பெறவும், பல்வேறு பணிகளுக்கா கவும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சி யர் அலுவலகத்துக்கு பல கி.மீ. தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இக் கிராமங்கள் அனைத்தும் அரூர்  வட்டத்தையொட்டி அமைந்துள்ள தால், இப்பகுதி மக்களின் சிரமங் களை தவிர்க்கும் வகையில், ஐந்து வருவாய் கிராமங்களையும் அரூர் வட்டத்துடன் இணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்து வந்தனர். இதையேற்று, தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த ஐந்து வருவாய் கிராமங்களை யும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலி ருந்து பிரித்து அரூர் வட்டத்துடன் இணைக்கலாம் என அரசு பரிந்துரை செய்து கருத்துருக்களை அனுப்பி யுள்ளது. இந்நிலையில், சித்தேரி மலைக் கிராம மக்களின் நலன்கருதியும், எஸ்.அம்மாபாளையம், சின்னாங் குப்பம், கோபிச்செட்டிப்பாளையம், கொளகம்பட்டி ஆகிய வருவாய் கிரா மங்களை உள்ளடக்கிய மொத்தம் ஐந்து கிராமங்களையும், அரூர் வரு வாய் வட்டத்துடன் இணைத்து டிச.12 ஆம் தேதி அரசாணை பிறப்பித் தது. ஏற்கெனவே சிறப்பு நிலை பேரூ ராட்சியாக இருந்த அரூர் அண்மை யில் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்ட நிலையில், தற்போது இந்த ஐந்து வருவாய் கிராமங்களையும் பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து அரூர் வட்டத்தில் இணைத்து அரசு ஆணை  பிறப்பித்ததற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

லாரி விபத்து

ஈரோடு, டிச.16- ஈரோடு மாவட்டம், 27  கொண்டை ஊசி வளைவுக ளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை வழியே தமிழ்நாடு -  கர்நாடக மாநிலங்களுக்கி டையே வாகனப் போக்குவ ரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசனூரிலி ருந்து மக்காச்சோள தட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டு கோவைக்கு லாரி ஒன்று  திங்களன்று சென்று கொண் டிருந்தது. மலைப்பாதை யில் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த லாரி சாலை யில் கவிழ்ந்தது.

சிபிஎம் கோரிக்கையால் திருமண மண்டபம் திறப்பு

நாமக்கல், டிச.16- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் கோரிக்கை யால், ஆலம்பாளையம் பேரூராட்சி திருமண மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலம்பாளையம் பேரூராட்சிக் குட்பட்ட அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகு தியில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடி யிருப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த  பகுதியை ஒட்டி கடந்த 2008 ஆம் ஆண்டு  பேரூராட்சி மண்டபமானது அப்போதைய ஆட்சியர் சகாயம் தலைமையில், அப்போ தைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த மண்டபத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக விசைத்தறி  தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்தவர்க ளும், ஏழை எளிய பொதுமக்களும் இந்த மண்டபத்தை சுப நிகழ்ச்சிகளுக்காக பயன்ப டுத்தி வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பு இன்மை காரண மாக மண்டபம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பல வருடங்களாக இந்த மண்டபம் பூட்டிக் கிடந்த நிலையில், இரவு  நேரத்தில் மது அருந்துவது, சீட்டு ஆடுவது, தகாத செயல்களை செய்வது என சமூக விரோ திகளின் கூடாரமாக மண்டபம் மாறத் தொடங்கியது. அன்னை சத்யா நகர் பகு தியை சுற்றிலும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வேறு தனியார் அரசு மண்டபங் கள் ஏதும் இல்லாததால், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விசேஷ நிகழ்வுகளை  நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவ தாகவும், எனவே தொலைநோக்கு பார்வையு டன் பேரூராட்சி மண்டபத்தை புதுப்பித்து தர வேண்டும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கும் பேரூராட்சி நிர்வா கத்திற்கும் மனு வழங்கினர். தொடர்ந்து பல்வேறு இயக்கங்களும் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு அப்போ தைய நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, அமைச்சர் மதிவேந்தன் முன்னிலையில் இந்த மண்டபத்தை மறுசீரமைப்பு செய்வதற் காக சுமார் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதன் திறப்பு விழா நிகழ்வானது செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே. எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அசோகன், திமுக  தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோ வன், பேரூர் திமுக செயலாளர் கார்த்திக்  ராஜா, பேரூராட்சித் தலைவர் சகுந்தலா துணைத்தலைவர், செயல் அலுவலர் கீதா   மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பேரூ ராட்சி மண்டபம் மீண்டும் பயன்பாட்டுக்கு  வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேலும், 15 ஆயிரம் ரூபாய்க்கு மண்டபம் வாடகைக்கு விடப்படும் எனவும், இது குறித்த விவரங்களை பேரூராட்சி அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ள லாம் எனவும் செயல் அலுவலர் கீதா தெரி வித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.