5 மாணவர்கள் பலி ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>5 மாணவர்கள் பலி ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் </strong></p>
<p>சிலகலூரிப் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கனப்பவரம் என்னும் இடத்தில் புதிய டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் கார் ஒன்று வேகமாக சென்றது. டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 6 பேரில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாய மடைந்த 2 பேர் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் செல்லும் வழியிலேயே இறந்தார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பலியான 5 பேரும் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாசு, மகேஷ், ஸ்ரீகாந்த், ராமிரெட்டி, யஷ்வந்த் சாய் என்றும், பொறியியல் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வரு வதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. சபரிமலைக்கு மாலை அணிந்தி ருந்த 6 பேரும், பல்நாடு மாவட்டத்தில் நடை பெறும் படிபூஜையில் பங்கேற்க சென்ற போது இந்த கோர விபத்தில் சிக்கி உயிரி ழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
