தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

5 மாநிலத் தேர்தல்: 104 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தேர்வு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாத பாஜக

6 May 2026, 8:36 pm
5 மாநிலத் தேர்தல்: 104 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தேர்வு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாத பாஜக

5 மாநிலத் தேர்தல்: 104 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் தேர்வு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தாத பாஜக

புதுதில்லி அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களில் மொத்தம் 723 எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் 104 பேர் (சுமார் 14.36%) முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மே.வங்கத்தில் 40

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 293 இடங்களில் 40 முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் தேர்வா கியுள்ளனர். இதில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 34, காங்கிரஸில் இருந்து 2, இந்திய மதச்சார்பற்ற முன்னணி 1, சிபிஎம் இல் இருந்து 1 இஸ்லாமிய எம்எல்ஏ ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியில் முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் யாரும் இல்லை. கேரள தேர்தலில் மொத்தம் 35 முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெற்றுள்ளனர். முஸ்லிம் லீக்கில் இருந்து 22, காங்கிரஸில் 8 பேர் வென்றுள்ளனர்.

அசாமில் 22

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 34 சதவிகிதம் முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 இடங்களில் 22 முஸ்லிம் எம்.எல்.ஏ-க்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 18 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் ரைஜோர் தள்-1, திரிணா முல்-1 மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி-2 பேர். 2023-ஆம் ஆண்டில் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறைப் பணியில் முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 35-லிருந்து 22-ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 234 எம்.எல்.ஏ-க்களில் 7 பேர் முஸ்லிம்கள். அதில் தி.மு.க - 3, முஸ்லிம் லீக் - 2, காங்கிரஸ் - 1, த.வெ.க - 1 என்ற அளவில் வென்றுள்ளனர். புதுச்சேரியில் ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ கூட தேர்ந்தெடுக்கப்பட வில்லை.

பாஜகவின் நிலைப்பாடு

பாஜக எங்குமே ஒரு முஸ்லிம் வேட்பாள ரைக் கூட நிறுத்தவில்லை. ஜனநாயகத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதி நிதித்துவம் கிடைப்பது அவசியம். ஆனால், சமீபகாலமாக பாஜகவின் மதவாத அரசியல் காரணமாக முஸ்லிம் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மக்கள் பிரதிநிதித்துவ அரசியலில் ஒரு கவ லையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 2024 மக்கள வைத் தேர்தலிலும் கூட பா.ஜ.க சார்பில் ஒரு முஸ்லிம் எம்.பி கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.