தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்

4 Nov 2026, 10:58 pm
5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்

5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்

சென்னை, நவ. 4 –தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை, தாம்பரத்தில் இருந்து திருச்சி, மானாமதுரைக்கு 5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரம் – மானாமதுரை

ரயில் எண் 06159 நவம்பர் 7 அன்று மாலை 4.35 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06160 நவம்பர் 9 அன்று இரவு 10 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, நவ.10 அன்று காலை 8.30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

மேலும், ரயில் எண் 06161 நவம்பர் 6-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06162 நவம்பர் 7-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 3.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

திருச்சி – தாம்பரம்

ரயில் எண் 06192 நவம்பர் 7-ஆம் தேதி காலை 5.50 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11.30 மணிக்குத் தாம்பரத்தைவந்தடையும்.

எழும்பூர் – திருச்சி

ரயில் எண் 06191 நவம்பர் 6-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சியைச் சென்றடையும். மேலும், ரயில் எண் 06193 நவம்பர் 7-ஆம் தேதி இரவு 7 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, நவம்பர் 8-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சியைச்சென்றடையும். மறுமார்க்கத்தில் ரயில் எண் 06194 நவம்பர் 9 அன்று இரவு 10.45 மணிக்குத் திருச்சியில் இருந்துபுறப்பட்டு, நவம்பர் 10 அன்று காலை 6.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.