தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Dec 2025, 4:08 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

சேலம், டிச.10- மேட்டூர் அருகே நங்கவள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் விலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தது. சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே சூரப்பள்ளி கிராமம் புதூர் பகுதியில் வசிக்கும் விவசாயி பழனி சாமி மற்றும் பாப்பாத்திக்காடு பகுதியைச் சேர்ந்த கோபால் ஆகியோர் செவ்வாயன்று மாலை வீட்டிற்கு அருகே உள்ள  மரத்தில் ஆடுகளை கட்டிவைத்தனர். இதனையடுத்து, புத னன்று விடியற்காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரி யாத விலங்கு விவசாயி பழனிசாமியின் 3 ஆடுகளையும், கோபால் என்பவரின் 2 ஆடுகளையும் கடித்ததால் உயி ரிழந்து காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி விவசா யிகள் கூறுகையில், இந்த பகுதியில் அடிக்கடி அடை யாளம் தெரியாத விலங்கு ஆடுகளை வேட்டையாடி வருவ தால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இறந்து போன ஆடுகளுக்கு தமிழக அரசு உரிய  நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளை வேட்டை யாடி வரும் விலங்கை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வனத்துறையினரை கேட்டுக் கொண்டனர்.

ஊடு பயிராக செண்டு மல்லி

மேட்டுப்பாளையம், டிச.10- வாழை மரத்தை நோய் தொற்றுதலில் இருந்து செண்டு மல்லி செடிகள் காப்பதால், வாழை விவசாயிகள் தங்களது தோட்டங்களில் செண்டு மல்லியை பயிரிட ஆர்வம் காட்டி  வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான சிறுமுகை மற்றும் காரமடை பகுதி களில் வாழை விவசாயமே பிரதானமாக உள்ளது. இங்குள்ள  வாழை விவசாயிகள் பலரும் தற்போது வாழை கன்றுகள்  நடவு செய்யும் போது ஊடு பயிராக செண்டு மல்லி பூச்செடி  நாற்றுகளையும் நடவு செய்து வருகின்றனர். இந்த பூச்செடி களின் வேர்களில் சுரக்கும் ஒரு வகை திரவம் வாழை மரங்க ளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுக்கும் மகசூல் அதி கரிக்கும் என்பதால் இதனை வாழை தோட்டங்களில் பயிர் செய்கின்றனர். மேலும், வாழையில் நடவு செய்து பத்து மாதங் களுக்கு பிறகே வாழைத்தார்கள் அறுவடை செய்யும் போது விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் நடவு செய்த  ஒன்றரை மாதங்களில் செண்டு மல்லி பூக்களை அறுவடை செய்வதால் கூடுதல் வருவாய் கிடைக்கின்றது. மேலும் வாழை தோட்டங்களில் களை செடிகள் வளர்வதை தடுக் கின்றது. இது தவிர பூக்கள் அறுவடை முடிந்த பின் செண்டு  மல்லி செடிகளோடு அப்படியே நிலத்தை உழுவதால் அவை  வாழைக்கு இயற்கை உரமாக மாறுவதால் இப்பகுதி வாழை  விவசாயிகள் தங்களது தோட்டங்களில் செண்டு மல்லியை  பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

போலி கால்நடை மருத்துவரிடம் விசாரணை

ஈரோடு, டிச.10- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடைகளுக்கு சிகிச்சை பார்த்து வந்த போலி மருத்துவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடை மருத்துவம் படிக்காமல் ஒருவர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தமிழ்நாடு கால்நடை நோய்த்தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிகாரிகள் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த விவசாயத் தோட்டத்தில் மாடுகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அதேபகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதும், கால்நடை மருத்துவம் படிக்காமலும், எந்தவித பயிற்சியும் பெறாமலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் கால்நடை நோய்த் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

உதகை, டிச.10- உதகையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனி யார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பர பரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மின்னஞ்சல் வாயிலாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகி றது. இதன்படி சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக நட்சத்திர விடுதிகள் மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் கவர்னர் மாளிகைக்கு மின் னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், உதகை அரசு மருத்துவக்கல்லூரிக்கும், தாவரவியல் பூங்கா பகுதியிலுள்ள பிரபல தனியார் பள்ளிக் கும் இ-–மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. வழக்கமாக பல்வேறு அரசியல் காரணங்கள் மற்றும் மத சம்பந்தமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த முறை, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இ–-மெயி லில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மருத்துவக் கல் லூரி நிர்வாகத்தினரும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீ சார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். முடிவில், புரளி என்று தெரிந்த தால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

நகராட்சி அலுவலக கட்டிடப் பணி

துவக்கம் சேலம், டிச.10- நரசிங்கபுரம் நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஆத் தூர் அருகே நரசிங்கபுரம் நக ராட்சியில் நகராட்சி அலுவல கம் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நி லையில், புதிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.4.05 கோடி நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடை பெற்றது. இதில், நகர்மன்றத் தலைவர் அலெக்ஸாண்டர், ஆணையர் பவித்ரா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.