முந்தய பக்கம்

சிபிஐக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

18 Mar 2026, 3:34 pm
சிபிஐக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
<p><strong>சிபிஐக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு</strong></p> <p>சென்னை, மார்ச் 18 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் &nbsp;கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. &nbsp;இதுதொடர்பான ஒப்பந்தம் புதனன்று (மார்ச் 18) அண்ணா அறிவாலயத்தில் கை யெழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலை வரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வின்போது திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. &nbsp;பன்னீர்செல்வம், சிபிஐ அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர். முத்த ரசன், மூத்த தலைவர் ஜி. பழனிச்சாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram