திருச்சி விரைவு செய்திகள்
29 Jan 2026, 3:04 pm

கொடைரோடு அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து 5 பேர் படுகாயம்

சின்னாளப்பட்டி, ஜன.28- திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு பெண் பார்க்கச் சென்ற பாலகுரு என்பவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 21 பேர் மினி வேனில் பயணம் செய்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் –மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கொடைரோடு அருகே காமலாபுரம் பிரிவு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. விபத்த தவிர்க்க முயன்ற ஓட்டுநர் தேவக்குமார் (35) திடீரென பிரேக் போட்ட தால், அவரது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை யின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் லேசான காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காவல்துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுப் படி பாலக்கோம்பை கிராமத்திற்கு அடிப்படை வசதி

தேனி, ஜன.29- தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுப்படி ஆண்டிப் பட்டி ஒன்றியம் பாலக்கோம்பை கிராமத்தில் அடிப்படை வசதி மேற்கொள்ளப்பட்டது. ஆண்டிபட்டி வட்டம், பாலக்கோம்பை வடக்கு தெரு வில் வசித்து வரும் அழகர் மற்றும் ஊர் பொதுமக்கள் தங்களது பகுதியில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்ப தால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும், மேலும் கொசு தொல்லை அதிகரிப்ப தாலும், கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக் கோரி கடந்த அக்டோபர் மாதம் தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவினை பரிசீலனை செய்த நீதிபதி ஏ.கே.கே ரஜினி, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) உள்ளிட்ட அலுவலர்களை நேரில் விசாரணை செய்து, உரிய கால அவகாசத்தில் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பாலக்கோம்பை பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் அமைத்து தரப்பட்டுள்ள அறிக்கையினை வியாழனன்று சம்பந்தப்பட்ட அலு வலர்கள் நிரந்தர மக்கள் மாவட்ட நீதிபதி ஏ.கே.கே.ரஜினி யிடம் வழங்கினர். மது விற்பனை: 2 பேர் கைது தேனி, ஜன.29- தேனி, கம்பத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர் களிடமிருந்து 56 மதுபாட்டில்களை பறிமுதல்செய்தனர். பூதிப்புரம் பொதுக் கழிப்பிடம் அருகே உள்ள முட்புத ரில் வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த சின்ன பாலு மகன் கோவிந்தன் (44) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். ரோந்து சென்ற மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கே.எஸ்.ராஜா அவரை கைது செய்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதுபோல கம்பம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முரு கன் மகன் ராமகிருஷ்ணன் (46) என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த பாளையம் மதுவிலக்கு காவல்நிலைய தலைமை காவலர் சிவகுமார், அவரிடமிருந்து 30 பாட்டில்களை பறி முதல் செய்தனர். மினிவேன் மோதி 2 பேர் படுகாயம் நத்தம், ஜன.29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வர் சதீஸ்குமார்(23). இவர் வியாழனன்று தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளைச்சாமி என்பவருடன் மேற்கிப்பட் டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டி ருந்தார். மணக்காட்டூர் அருகே உள்ள கோழிப்பண்ணை பகுதி யில் சென்று கொண்டிருந்த போது எதிரே கோசுகுறிச்சி- கம்பிளியம்பட்டியை சேர்ந்த விஜய்(20) என்பவர் ஓட்டி வந்த மினிவேன் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமார், வெள்ளைச்சாமி ஆகிய இரு வரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கார் மோதி ஒருவர் படுகாயம் நத்தம், ஜன.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி யைச் சேர்ந்தவர் திரவியம்(57) தொழிலாளி. இவர் கடந்த 27 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை- துவ ரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். வேம்பரளி பிரிவு பகுதியில் பின்னால் சென்னை- குரோம்பேட்டையை சேர்ந்த அனிருத்(35) என்பவர் ஓட்டி வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த திரவி யத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக கேரள அதிகாரிகள் ஆலோசனை

தேனி, ஜன.29- தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் பொருட்டு, கம்பத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. தமிழகத்தின் எல்லை பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத் தும் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர், குடிமைப் பொருள் வழங் கல் சி.ஐ.டி அதிகாரிகள் மற்றும் கேரள மாநில குடிமைப் பொருள் வழங்கல் அதி காரிகள் ஆகியோருக்கிடையேயான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி நல் லையா தலைமை தாங்கினார். கூட்டத்தில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க இரு மாநில எல்லை பகுதிகளி லும் உள்ள சோதனைச் சாவடிகளை பலப் படுத்துதல், தமிழக எல்லை சோதனை சாவ டியில் சோதனையை தீவிரப்படுத்தவும், தொலைபேசி எண்கள், சந்தேகப்படும் வாகனங்கள் மற்றும் நபர்கள் உள்ளிட்ட தகவல்களை இரு மாநில அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுதல், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கூட்டாக சோதனை நடத்தும் போது ஒரு வருக்கொருவர் உதவி செய்தல், தலை மறைவான குற்றவாளிகளை கைது செய்ய வும், கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் பிடி யாணை நிறைவேற்றவும், ரேசன் அரிசி போன்றவற்றை பெறுபவர்களில் பெரும் பாலானோர் கேரள மாநில எல்லையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். எனவே, ரேசன் அரிசி வாங்குபவர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, அவர் களை கைது செய்ய தமிழ்நாடு காவல் துறைக்கு உதவ கேரளா அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பது குறித்தும் விவா திக்கப்பட்டது கூட்டத்தில் கம்பம் மெட்டு இன்ஸ்பெக் டர் ரமேஷ், உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் லதா, தாலுகா வட்ட வழங்க அலுவலர்கள் மோகன் முனியாண்டி உத்தமபாளையம், ராமராஜ் பெரியகுளம், இந்திரா தேனி, காசிநாதன் ஆண்டிபட்டி, பீருமேடு ரெஜி தாமஸ், உடும்பன்சோலை ராய் தாமஸ், பீர்மேடு கணேசன் உட்பட தமிழக, கேரள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரி பிப்.9 முதல் சென்னையில் போராட்டம்

இராஜபாளையம், ஜன.29- தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ திய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்கக் கோரி, வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னையில் மாநில அளவிலான போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என தமிழ் நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் அறிவித் துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராமசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சி களில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், 2018ஆம் ஆண்டு முதல் காலமுறை ஊதிய மாக ரூ.15,900 – 50,400 வரை (சி கிரேடு) ஊதியம் பெற்று வருகின்றனர். முழுநேர பணி யாளர்களான ஊராட்சி செயலாளர்களுக்கு, பணி ஓய்வு பெறும் போது தற்போது மாதம் ரூ. 2,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணை க்க வலியுறுத்தி, சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போராட் டத்தில் 8,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அரசால் ஊராட்சி செயலாளர்களின் ஊதியத்திலிருந்து சுமார் ரூ.6 கோடி வரை பிடித்தம் செய்யப்பட்டது. பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் துறை ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், 19 நாட்களுக்கு மேலா கியும் இதுகுறித்து அரசாணை வெளியிடப்பட வில்லை. இந்நிலையில், முதல்வர் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பில், பகுதிநேர பணியா ளர்களுடன் இணைத்து ரூ.3,400 ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊராட்சி செயலா ளர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும் சூழலை உருவாக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, ஒத்திவைக்கப்பட்ட போராட்டத்தை மீண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னை யில் மாநில அளவில் தொடங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், ஊராட்சி செயலாளர்களை உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு மாதம் ரூ.15,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தெரி வித்தார்.