முந்தய பக்கம்

வறுமையால்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

22 Feb 2026, 3:26 pm
வறுமையால்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
<p><strong>வறுமையால் &nbsp;ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை</strong></p> <p>பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஸ்கஞ்ச் பகு தியில் வசிப்பவர் சத்யவீர். வெல்டிங் வேலை செய்து வந்தார். வீட்டில் கடும் பொருளாதார நெருக்கடி &nbsp;நிலவி வந்தது. இத்தகைய சூழலில், அவ ரது 10 வயது மகன் கிரீஷுக்கு நரம்பு &nbsp;சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்பட் டது. &nbsp;உ.பி., பாஜக அரசு கண்டுகொள்ளாத நிலையில், மருத்துவச் செலவுகளுக்கு சத்யவீர் பலரிடம் கடன் வாங்கி சமா ளித்துள்ளார். ஒரு பக்கம் வருமானம் இல்லை ; மறுபுறம் கடன் சுமை ஏறிக் &nbsp;கொண்டே சென்றது. இதனால் சத்யவீர் &nbsp;(45) அவரது மனைவி ராம்ஸ்ரீ (40), &nbsp;மகள் &nbsp;கள் பிராச்சி (14), ஆகான்ஷா (13) மற்றும் &nbsp;மகன் கிரீஷ் (10) ஆகியோர் தற்கொலை &nbsp;செய்து கொண்டனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, சத்யவீரும் அவ ரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு நாட்டில் பணவீக்கத்தால் வறுமை வாட்டி வரும் &nbsp;நிலையில், &nbsp;உத்தரப்பிரதேச மாநிலத்தில் &nbsp;ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற் கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram