தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளாவின் ‘லைப் மிஷன்’ திட்டத்தில் 5 லட்சம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன

24 Feb 2026, 3:55 pm
கேரளாவின் ‘லைப் மிஷன்’ திட்டத்தில் 5 லட்சம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன

கேரளாவின் ‘லைப் மிஷன்’ திட்டத்தில் 5 லட்சம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டன

முதலமைச்சர்  பினராயி விஜயன்

அறிவிப்பு திருவனந்தபுரம், பிப்.24- ‘லைப் மிஷன்’ என்கிற கேரள அரசின் வீடுகட்டும் திட்டத்தின் மூலம் ஐந்து லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். திருவனந்தபுரம் கரகுளம் கிராம பஞ்சாயத்தில் உள்ள கோமளகுமாரியின் வீடு திறப்பு விழாவில் முதலமைச்சர் பினராயி  விஜயன் மற்றும் பிற அமைச்சர்கள் செவ்வா யன்று காலை 11 மணிக்கு பங்கேற்றார்கள். அதன் தொடர்ச்சியாக பூஜப்புரா மைதானத்தில் மாலையில் நடைபெற்ற விழாவில், 5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பினராயி விஜயன் அறி வித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,”லைப் மிஷன் மூலம் ஒதுக்கப்பட்ட மொத்தம் 6,04,046 வீடுகளில், இதுவரை 5,00,364 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீத முள்ள 1,03,682 வீடுகள் கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளது.  வீடு கட்டுவதற்காக பட்டியல் பழங்குடியினருக்கு ரூ.6 லட்சமும், பொதுப் பிரிவிற்கு ரூ.4 லட்சமும் அரசு வழங்கி வருகிறது” என அவர் கூறினார். விழாவிற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.பி. ராஜேஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டனர். திட்டத்தின் வெற்றிக்கு ஒத்துழைத்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சிறப்பிக்கப்பட்டனர். ‘மனசோடித்திரி மண்’  (மன நிறைவோடு கொஞ்சம் நிலம்) திட்டத்திற் காக 2.61 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய கே. சுகுமாரன் வைத்தியரையும், லைப்  மிஷனை ஆதரித்த கே. சிட்டிலப்பிள்ளி அறக் கட்டளை மற்றும் லயன்ஸ் இன்டர்நேஷனல் போன்ற அமைப்புகளையும் முதலமைச்சர் பினராயி விஜயன்  சிறப்பு செய்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.