முந்தய பக்கம்

மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு மாநில அளவில் சிறந்த கைவினைஞர் விருது

18 Feb 2026, 3:04 pm
மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு  மாநில அளவில் சிறந்த கைவினைஞர் விருது

மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு  மாநில அளவில் சிறந்த கைவினைஞர் விருது

தென்காசி, பிப்.18- தமிழகஅரசின், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில் “அடுத்த தலைமுறை கைவினை கலைஞர்கள்” மாநில அளவிலான கைத்திறன் போட்டி சென்னை நகரில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர் களுக்கு “சிறந்த கைவினைஞர் 2025-2026”  விருது வழங்கினார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இலஞ்சி இராமசுவாமி பிள்ளைமேல் நிலைப்பள்ளி ஆர்.பி.ஓவியக்கழக மாண வர்கள் நிலோபர், சுபாஷ் ராஜவேல், ஹரிகோவிந்த ராஜா, மதன்ராஜ், முத்துராம், மாநில அளவில் சிறந்து விளங்கி 5 விருதுகளைப் பெற்றனர். இம் மாணவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்டக் கல்வி அலுவலர் கண்ணன் மற்றும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பாராட்டினர். மாணவர்களின் இந்த சாதனை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்ததுடன், கைவினைத் திறன்களை ஊக்குவிக்கும் முயற்சியாக  உள்ளது என கல்வி வட்டா ரங்களில் பாராட்டப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram