தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிகளை மீறி முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றிய 5 சாய ஆலைகளுக்கு சீல்

19 May 2026, 12:54 am
விதிகளை மீறி முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றிய 5 சாய ஆலைகளுக்கு சீல்

விதிகளை மீறி முறைகேடாக கழிவு நீரை வெளியேற்றிய 5 சாய ஆலைகளுக்கு சீல்

நாமக்கல், மே 17- குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் இயங்கிவரும் சாய ஆலை கள் காவிரி நீரை மாசுபடுத்துவதை தடுக்க 26 ஆலைகளை ஆய்வு செய்து, 5 ஆலைகளுக்கு சீல் வைத்து, 19 ஆலை களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறி வுறுத்தல் எச்சரிக்கை கடிதம் அனுப்பி யுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம், பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய, சலவை பட்டறை கள் தங்களது தொழிற்சாலையில் உரு வாகும் கழிவு நீரினை முறையாக சுத் திகரிக்கப்படாமல் அருகிலுள்ள கால் வாய்கள்- ஓடைகள் வழியாக வெளி யேற்றி காவேரி ஆற்றின் நீரினை மாசு படுத்தி வருகின்றன.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரி யம், சேலம் மண்டல இணைத்தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்தி ரன் தலைமையில், குமாரபாளையம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி மற்றும் மூன்று குழுக் கள் கொண்ட பொறியாளர்களால் கடந்த இரண்டு நாட்களாக ஒன்பதாம் படி, டிவிஎஸ் மேடு, வசந்தா நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பள்ளிபாளையம் பகுதியில் இயங்கிவரும் 26 சாய, சலவை பட்டறைகளில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி ஆய்வு மேற்கொள்ளப் பட்ட ஆலையகளில் விதிகளை மீறி முறைகேடாக கழிவு நீரை வெளியேற் றிய பட்டறைகளுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலு வலகத்திலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத் தரவின் பேரில் ஞாயிறன்று 5 சாய பட் டறைகளின் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டு மூடப்பட்டது.

2 பட்டறைக ளுக்கு காரண கேட்பு கடிதம் அனுப்பி யும் மற்றும் பிற 19 பட்டறைகளுக்கு அறி வுறுத்தல் எச்சரிக்கை கடிதம் அனுப் பப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

இவை தவிர, தொடர்ந்து மேற் கொண்ட ஆய்வின் போது விதி மீறி முறைகேடாக இயங்கிய 6 பட்டறை களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை யில் செயல்பட்டுவரும் மாவட்ட ஒருங் கிணைப்பு குழு மூலம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தர வின் பேரில் மேலும் 6 சாய/சலவை பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டும், சீலிடப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தம் 27 சாய / சலவை ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும், சீலிடப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.