தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தால் 5 கோடி பேர் பயனடைந்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

19 Jan 2026, 2:23 pm
மக்களைத்தேடி  மருத்துவத் திட்டத்தால் 5 கோடி பேர் பயனடைந்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
<p><strong>மக்களைத்தேடி &nbsp;மருத்துவத் திட்டத்தால் 5 கோடி பேர் பயனடைந்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு</strong></p> <p>சென்னை, ஜன.19- தமிழகத்தில் மக்க ளைத் தேடி மருத்துவத் திட்டத்தால் இதுவரை 5 கோடிப்பேர் பயன டைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். &nbsp;கிராமப்புற மக்களுக்கு &nbsp;முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும், நோக்கத்தோடு சிம்ஸ் மருத்துவமனை யின் இந்தியாவின் முதல் நடமாடும் மருத்துவ பேருந்தை &nbsp;(சிம்ஸ் ஹலோ டாக்டர் - ஹெல்த் ஆன் வீல்ஸ்) திங்களன்று சென்னையில் தொடங்கி வைத்து அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற வுடன் 2021 ஆகஸ்ட் மாதம் நீரிழிவு உயர் அழுத்தம்,&#39;வலி நிவாரண சிகிச்சை, பிசியோ தெரபி,பக்க வாதம் போன்ற ஐந்து வகை நோய் பாதிப்புகளுக்கு நோயாளிகளின் வீடுக ளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்து. &nbsp;கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மிக விரைவில் ஒரு கோடி பயனாளிகளை இந்த திட்டம் சென்றடைய வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் அந்த திட்டம் &nbsp;தொடங்கப்பட்டு தற்போது வரை 2.50 கோடி மக்கள் பய னடைந்துள்ளனர். மீண்டும் மீண்டும் சிகிச்சை என்ற வகையில் 5 கோடிப்பேர் பயனடைந்துள்ளனர். தொற்றா நோய் பாதிப்புகளுக்கு அரசு தீர்வு கண்டு வருவதால் இந்த &nbsp;திட்டத்திற்கு கடந்தாண்டு &nbsp;ஐநா சபை விருது வழங்கி யது என்றும் அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் &nbsp;தமிழச்சி தங்க &nbsp;பாண்டியன், விருகம்பாக் கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி பச்ச முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.