தீக்கதிர் முக்கிய செய்திகள்
12 Nov 2025, 3:20 pm

எஸ்ஐஆர் பணியில் 5 கோடி படிவங்கள் விநியோகம்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 5 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரி வித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 78.09 சதவிகிதம் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 6.41 கோடி படிவங்கள் அச்சடிக்கப்பட்டு இதுவரை 5 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 10.21 லட்சம் படிவங்கள் அச்சடிக்கப்பட்டு இதுவரை 9.5 லட்சம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. புதுச் சேரியில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் 93.04 சதவீதம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12 மாநிலங்களில் இது வரை 72.66 சதவிகிதம் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.

பொதுச் சின்னம் கோரி மநீம விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிட பொதுச் சின்னம் ஒதுக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது. கமல்ஹாசன் எம்.பி. தலைமையிலான மக்கள் நீதி மய்யம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட பத்து சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொது சின்னத்தை ஒதுக்குமாறு விண்ணப்பத்தில் கோரியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதிநிதிகள் தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் அதிகாரி களைச் சந்தித்து, இதற்கான விண்ணப்பத்தை நேரில் அளித்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு, ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணை யம் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: சிவ கங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி - சக்குடி நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சோ னேஸ்வரிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

2026-க்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறைப் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண் டிற்கான பொது விடு முறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 24 நாட்கள் அரசு விடு முறையாக அறிவிக்கப் பட்டுள்ளன. ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் திரு நாள், ஜனவரி 26 குடி யரசு தினம், பிப்ரவரி 1 தைப்பூசம், மார்ச் 19 தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 21 ரம்ஜான், மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3 புனித வெள்ளி, ஏப்ரல் 14 டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு, மே 1 மே தினம், மே 28 பக்ரீத், ஜூன் 26 மொஹரம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 26 மிலா துன் நபி, செப்டம்பர் 4 கிருஷ்ண ஜெயந்தி, செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக் டோபர் 19 ஆயுத பூஜை, அக்டோபர் 20 விஜய தசமி, நவம்பர் 8 தீபா வளி, டிசம்பர் 25 கிறிஸ் துமஸ் ஆகியவை விடு முறை நாட்களாகும். வணிக மற்றும் கூட்டு றவு வங்கிகளின் வரு டாந்திர கணக்கு முடிக் கும் நாளான ஏப்ரல் 1- ஆம் தேதி, தமிழ்நாட் டில் உள்ள வணிக மற்றும் கூட்டுறவு வங்கி களுக்கு மட்டும் விடு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது.