தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5.18 கோடி பெயர்கள் நீக்கம்!

12 Apr 2026, 5:24 pm
12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5.18 கோடி பெயர்கள் நீக்கம்!

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டம் நிறைவடையும் நிலையில், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 5.18 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் இரண்டாம் கட்டமானது உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, எஸ்.ஐ.ஆர் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தது. இதில், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 5.18 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 12 மாநிலங்களிந் வாக்காளர் பட்டியலின் மொத்தம் 45.81 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். இது எஸ்.ஐ.ஆர்-க்கு முந்தைய வாக்காளர் எண்ணிக்கையை விட 10.2% குறைவாகும்.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மொத்தம் 66,88,636 இறந்த வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில், இறந்த வாக்காளர்கள் 66,88,636 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 25.47 லட்சம் இறந்த வாக்காளர்கள் பெயர்களும், மேற்கு வங்கத்தில் சுமார் 24.16 லட்சம் இறந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.