பிப்.17, 18 தேதிகளில் சென்னையில் 4 ஆவது இந்திய நூலக மாநாடு
8 Feb 2026, 3:55 pm
<p><strong>பிப்.17, 18 தேதிகளில் சென்னையில் 4 ஆவது இந்திய நூலக மாநாடு</strong></p>
<p>சென்னை, பிப். 8 - நான்காவது இந்திய நூலக மாநாடு பிப்.17-18 தேதிகளில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் நூலகங்களை நிலைத்த, சமத்து வமான மற்றும் ஜனநாயக அடிப்படையில் வளர்க்கும் நோக்குடன் இந்திய நூலக காங்கிரஸ் எனும் அமைப்பு செயல்படுகிறது. அறிவு, சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் பொதுத் தளமாக நூலகங்களை உருவாக்க வேண்டும். விடுதலை உணர்வூட்டும் நூலகங்களை உரு வாக்கும் முறைகளை இந்திய நூலகக் காங்கி ரஸ் முன்னிறுத்துகிறது. இந்திய நூலக காங்கிரசின் முந்தைய மாநாடு கள் கேரளா, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்ச்சி யாக நான்காவது இந்திய நூலக மாநாடு-2026 சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற் கான அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்வு ஞாயி றன்று (பிப்.8) அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நீதியரசர் சந்துரு, டாக்டர் வி.சிவ தாசன் எம்.பி, பி.வில்சன் எம்.பி., பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்திரமோகன், மாநாடு ஒருங்கி ணைப்பாளர் வி.விஜயகுமார், சமூக செயற்பாட் டாளர்கள் ஜி.செல்வா, நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவ தாசன் எம்.பி., “பொது நூலகம் மூலமாக சமூ கத்தில் அறிவு வளர்ச்சியை வலுப்படுத்தும் மக்கள் இயக்கமாக கேரளாவில் முன்னெடுக்கப்பட்டு, அது இந்திய நூலக காங்கிரசாக பரிணமித்து உள்ளது. இதன் நான்காவது அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்கிறது. அனைவருக்கும் நூலகம் என்ற கருத்தை சாத்தியப்படுத்தவும், பொதுத்தளங்களும் அறிவும் அனைவரின் உரிமை என்ற கோட்பாட்டை நிலை நாட்டும் முயற்சியாகவும் இந்த மாநாடு நடைபெறு கிறது. அறிவுத்தளங்கில் நிகழும் மாற்றங்களை விவாதிப்பதோடு, மாநிலங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு, நூலகங்களின் எதிர்காலம் குறித்து தேசிய அளவிலான உரையாடலை மாநாடு தொடர்ந்து முன்னெடுத்து செல்லும். மாநாட்டில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கல்வியாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த நூலகத் துறை நிபுணர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பண்பாட்டு அமைப்பு களின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைக்கிறோம். மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூத்த பத்திரி கையாளர்கள் என்.ராம், பி.சாய்நாத், நீதியரசர் சந்துரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம், கிரிராஜன், சல்மா, தமிழ்நாடு அரசுத்துறைச் செய லாளர்கள் டாக்டர் பி. சந்திரமோகன், எஸ். ஜெயந்தி, உமா மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர். இவ்வாறு அவர் கூறினார். மாநாட்டில் பங்கேற்க, கூடுதல் தகவல்களை பெற வி. விஜயகுமார் (தொலைபேசி: +91 99463 60081), டாக்டர் ஆர்.வி.பிந்து (தொலைபேசி: +91 94425 49618) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.</p>
