தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா கேட்டு  சிபிஎம் சார்பில்  4500 மனுக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு

30 Dec 2025, 4:07 pm
செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா கேட்டு  சிபிஎம் சார்பில்  4500 மனுக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு
<p><strong>செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா கேட்டு &nbsp;சிபிஎம் சார்பில் &nbsp;4500 மனுக்கள் &nbsp;மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பு</strong></p> <p>செங்கல்பட்டு, டிச.30- செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்கக் வலியுறுத்தி கடந்த 16ம் தேதியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கத்தை ஒட்டி, கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை யிலான குழு முதலமைச்சரை நேரில் சந்தித்து, நில வகை மாற்றம் செய்து மக்களுக்கு பட்டா வழங்கிடக் கேட்டு கடிதம் அளித்திருந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 29 தேதியன்று தலைமை செயலகத்தில் வரு வாய்த்துறை செயலாளர் பெ.அமுதா விடம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் சென்ற குழு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வழங்க கோரி மனு அளித்தது. வருவாய்த்துறை செயலாளர் வழிகாட்டுதல்படி சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியரிடம் ஒவ்வொரு தனிநபரின் மனுவை கொடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். &nbsp;இந்நிலையில் கடந்த டிசம்பர் 16 அன்று பெறப்பட்ட மனுக்களை சிபிஎம் தென் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், தாம்பரம் பகுதி செயலாளர் தா.கிருஷ்ணா, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.அரிகிருஷ்ணன், எம்.சி.பிரபாகரன் ஆகியோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகாவிடம் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.