முந்தய பக்கம்

45.5 கிலோ வெள்ளி மோசடி: பெண் உட்பட மூவர் கைது

22 Mar 2026, 4:19 pm
45.5 கிலோ வெள்ளி மோசடி: பெண் உட்பட மூவர் கைது
<p><strong>45.5 கிலோ வெள்ளி மோசடி: பெண் உட்பட மூவர் கைது</strong></p> <p>சென்னை, மார்ச் 20- &nbsp;சவுக்கார்பேட்டையில் இரண்டு வெள்ளி வியாபாரிகளிடமிருந்து 45.5 கிலோ வெள்ளி கட்டிகளைப் பெற்று மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேரை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். சௌகார்பேட்டையைச் சேர்ந்த திலீப் குமார் மற்றும் ஆசிப் ஆகியோர், வியாசர்பாடியில் வெள்ளிப் பட்டறை நடத்தி வந்த முருகன் என்பவரிடம் வெள்ளிப் பொருட்கள் செய்ய 45.5 கிலோ வெள்ளி கட்டிகளை வழங்கியிருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் முருகன் உயிரிழந்த நிலையில், பட்டறையை நிர்வகித்து வந்த அவரது மனைவி தனலட்சுமி, சகோதரர் சதீஷ் குமார் மற்றும் தனலட்சுமியின் தந்தை வேதாசலம் ஆகியோர் அந்த வெள்ளியைத் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். பின்னர் வெள்ளியைத் தர மறுத்து மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அந்த வெள்ளியை விற்றது தெரியவந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram