தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மாதிரி பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி

19 Feb 2026, 3:09 pm
அரசு மாதிரி பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி
<p><strong>அரசு மாதிரி பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி</strong></p> <p>சென்னை,பிப்,19- &nbsp;தமிழ்நாட்டில் அரசு மாதிரிப் பள்ளி களில் படித்த 448 மாணவர்கள் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள் ளனர் என பள்ளிக் கல்வித் துறை தெரி வித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங் களில் பிஇ, பிடெக் படிப்பில் சேர ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஜேஇஇ முதன்மைத் தேர்வு, &nbsp;அட்வான்ஸ் தேர்வு என 2 பிரிவாக நடை பெறுகிறது. தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் 2 கட்டங்களாக முதன்மைத் தேர்வை நடத்துகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக் கான முதற்கட்ட முதன்மை தேர்வு நாடு முழுவதும் 658 மையங்களிலும், இரண்டாம் கட்டமாக 326 மையங்களி லும் கடந்த ஜனவரி 21,22,23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட 13 மாெழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை எழுத 13 லட்சத்து 55 ஆயிரத்து 293 பேர் விண்ணப்பித் தனர். 13 லட்சத்து 4 ஆயிரத்து 653 பேர் தேர்வெழுதினர். அதற்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி 16்-ந் தேதி https://jeemain.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப் படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் படித்த 448 மாணவர்கள் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என &nbsp;பள்ளிக்கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகை யில், &lsquo;&rsquo;திருவண்ணாமலை மாவட்ட மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் பிரவீன் 99.53 மதிப்பெண்களும், நரேஷ் 99.50 மதிப்பெண்களும், ராணிப் பேட்டை மாவட்ட மாதிரிப் பள்ளியில் படித்த வேல்முருகன் 99.42 மதிப் பெண்களும் பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில், அரசுப் &nbsp;பள்ளிகளைச் சேர்ந்த 2,358 மாணவர் கள் 50 துறைகளில் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (IIT), தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் (NLU) &nbsp;மற்றும் தேசிய ஃபேஷன் தொழில் நுட்ப நிறுவனம் (NIFT) உட்பட 93 முதன்மையான நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். தற்போது, 41 மாணவர்கள் ஐஐடி- களில் படிப்பைத் தொடர்கின்றனர். அதே நேரத்தில் 17 மாணவர்கள் ஜப்பான், தைவான் மற்றும் மலேசி யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு அரசின் முழு நிதி உதவி யுடன் சேர்ந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப் பட்டதிலிருந்து, 39,044 மாணவர்கள் இந்த நிறுவனங்களில் படித்து உயர் கல்வி நோக்கி முன்னேறியுள்ளனர். தேசிய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய பல்கலைக்கழகங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதை உறுதி செய்யும் தொலைநோக்குப் பார்வை யுடன் மாதிரிப் பள்ளி அறிமுகப் படுத்தப்பட்டது. கல்விரீதியாக பின்தங்கிய 10 மாவட்டங்களில் நிறுவப் பட்டு, பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப் பட்டது. மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்வதுடன், வாழ்க்கைத் திறன்கள், இசை, நடனம், எழுத்தறிவு, சுய பாது காப்பு மற்றும் ஆங்கிலத் தொடர்பு ஆகியவற்றில் பயிற்சி பெறுகின்றனர். இந்த முழுமையான அணுகுமுறை, உலகளவில் பல்வேறு கல்விச் சூழல்களில் சிறந்து விளங்கத் தேவை யான அறிவு, திறன் மற்றும் தன்னம் பிக்கையுடன் மாணவர்களை வளர்க்கி றது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள முன்னணி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் முழு கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறது&rsquo;&rsquo; என அவர் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.