தீக்கதிர் விரைவு செய்திகள்
28 Dec 2025, 2:16 pm

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்

சென்னை, டிச.28 - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம் சமர்ப்பித்து ள்ளனர். டிச.27 அன்று ஒருநாள் மட்டும் 2,56,793 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபணை குறித்து 4,741 பேர் படிவம்-7 விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி வரைவு வாக்கா ளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல்

இலங்கை, டிச.28 - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை ஞாயிறன்று கைது செய்தது. கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 3 பேரை ஜன.7 வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இந்த உத்தரவை தொடர்ந்து மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.