தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

21 Mar 2026, 2:42 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவையில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, மார்ச் 21 - இந்தியாவின் மொத்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை வாகனங்களில் 31 சதவீதத்தை கொண்டு தமிழ்நாடு  தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. கிராமப்புற மற்றும்  மலைப் பகுதிகளில் மருத்துவச் சேவைகளை கொண்டு  சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து  வருகிறது. 2025 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, தமிழ்நாட்டில் 435  ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஒப்பீட்ட ளவில், உத்தரப் பிரதேசத்தில் 170, ராஜஸ்தானில் 183,  குஜராத்தில் 74, ஆந்திரப் பிரதேசத்தில் 67, மேற்கு வங்கத்தில் 49, அசாமில் 36, பஞ்சாப்பில் 33, மராட்டியத் தில் 20, சத்தீஸ்கரில் 30, அரியானாவில் 58 மற்றும் அரு ணாச்சலப் பிரதேசத்தில் 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே உள்ளன. என்.ஆர். காங்கிரஸ்-பாஜக தொகுதி உடன்பாடு

அதிமுகவிற்கு தொகுதிகள் குறைப்பு

புதுச்சேரி, மார்ச் 21 - புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவிற்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுகவிற்கும் புது வரவான லட்சிய ஜனநாயக கட்சிக்கும் தலா இரண்டு தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஐந்து  தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை  மூன்று தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை  ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவிற்கு இந்த முறை கூடுதலாக ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்பு போட்டியிட்ட 16 தொகுதிகளிலேயேதான் போட்டியிடும் என்ற முடிவில் என்.ஆர். காங்கிரஸ் திடமாக  இருந்தது. பாஜக அதிக தொகுதிகள் கோரியதும், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கும் முடிவிற்கும் என்.ஆர். காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் தொகுதிப்  பங்கீடு கையெழுத்தானது.

புதுச்சேரி முதல்வரின்  சொத்து மதிப்பு ரூ.36 கோடி

புதுச்சேரி, மார்ச் 21- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். வேட்புமனுவுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிர மாணப் பத்திரத்தில் அவரது சொத்து விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, அவரது பெயரில் அசையும் சொத்து மதிப்பு  ரூ.21 கோடியே 25 லட்சமாகவும், அசையா சொத்துகள்  ரூ.27 கோடியே 78 லட்சமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு முத்து செயின் மற்றும் ஒரு மோதிரம் உள்ளிட்டவையும் சொத்து விவரங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின்போது அமைச் சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி, மார்ச் 21 - புதுச்சேரியில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ள நிலையில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டி யலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல், ஏப்ரல் 9 ஆம்  தேதி நடக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில், லட்சிய ஜனநாயக கட்சியை சேர்த்துக் கொள்ள முதல்வர்  ரங்கசாமி ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வார மாக நிலவி வந்த கடும் இழுபறிக்கு பிறகு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலை யில் 9 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை  பாஜக வெளியிட்டது. ஒரு தொகுதிக்கு இன்னும் வேட்பாளர்  அறிவிக்கப்படவில்லை.

பாலியல் வழக்கில் தண்டனை: முன்னாள் டிஜிபி சரணடைய விலக்கு நீட்டிப்பு

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸ் சரணடைவதற்கான விலக்கை உச்ச நீதி மன்றம் மேலும் நீட்டித்துள்ளது. விழுப்புர மாவட்ட நீதிமன்றம் 2023 ஆம் ஆண்டு ராஜேஷ்தாசுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அதையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்கவும்  சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை தள்ளு படி செய்த நீதிமன்றம் உடனே சரணடைய உத்தரவிட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தொடரப் பட்டது. இந்த வழக்கு சனிக்கிழமை (மார்ச் 21) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை மறு  ஆய்வு மனு நிலுவையில் இருப்பதால், விலக்கு நீட்டிக்க  வேண்டும் என ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  விசாரணையின்போது நீதிபதிகள் விலக்கை நீட்டித்தும், மறு ஆய்வு மனுவை விரைவாக விசாரித்து முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

மாணவி கொலை வழக்கில்  கைதானவர் மதுரை சிறைக்கு மாற்றம்!

தூத்துக்குடி, மார்ச் 21- விளாத்திகுளம் அருகே மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மாணவி கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தர்ம முனீஸ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். மேலும், ஏப்ரல் 2 ஆம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் முதலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதுகாப்பு சூழல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சிறைத்துறை நிர்வாகம் அவரை இடமாற்றம் செய்ய முடிவு செய்தது.  இதனடிப்படையில், பலத்த காவல் பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரன் இரவோடு இரவாக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

மினரல் வாட்டர் கேன் விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்வு

சென்னை: தமிழ்நாட் டில் மினரல் வாட்டர் கேன்  விலை ரூ.3 முதல்  ரூ.5 வரை உயர்ந்து உள்ளது. ஈரான்-அமெ ரிக்கா-இஸ்ரேல் போர்  காரணமாக மூலப்பொ ருட்கள் விலை 40 சத வீதம் அதிகரித்துள்ள தால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியா மல் ஏற்பட்டதாக மினரல் வாட்டர் தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி மனு

சென்னை: ஏப்ரல்  23 ஆம் தேதி நடைபெற வுள்ள தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்  கே.கே. ரமேஷ் இந்த  வழக்கை தொடர்ந்து உள்ளார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை  மோசமாக இருப்பதால் தேர்தலை நிறுத்தி வைக்க  வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார். இதற்கிடையே, 234  தொகுதிகளுக்கும் ஒரே  கட்டமாக தேர்தல் நடத்தப் படவிருக்கும் நிலையில், வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொ டங்கி அதே தேதி கடைசி  நாளாகவும் அமைய வுள்ளது. வாக்குப் பதிவுக் கான முன்னேற்பாடு களை தேர்தல் ஆணை யம் தீவிரமாக மேற் கொண்டு வருகிறது.

ராமதாஸுடன் கூட்டணி: தேர்தலை சந்திக்கும் சசிகலா

திண்டிவனம்: அனைந்திந்திய புரட்சித்  தலைவர் மக்கள் முன் னேற்ற கழகம் மற்றும் பாமக இடையே தமிழக-புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி  ஒப்பந்தம் கையெழுத்தா னது.  கூட்டணி கையெழுத் திட்ட பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய சசிகலா, “ராமதாஸுடன் இணைந்து தமிழக சட்ட மன்றத் தேர்தலை சந்திக் கவுள்ளோம்” என்று தெரி வித்தார்.  ராமதாஸ் பேசும் போது, “இந்த வெற்றிக்  கூட்டணி தமிழகத்தில் தாக்கத்தை உருவாக்கி யுள்ளது. 234 தொகுதி களிலும் போட்டியிடுவோம்” என்றார்.

குற்ற வழக்குள்ள வேட்பாளர்கள்  விவரங்களை வெளியிட உத்தரவு

சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் குற்ற வழக்குகள் உள்ள  வேட்பாளர்கள் தங்கள் வழக்கு விவரங்களை  பொதுவெளியில் கட்டாயம் வெளியிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. இதற்காக சி-1 முதல் சி-8  வரையிலான சிறப்பு படிவங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “குற்ற வழக்கு கள் உள்ள வேட்பாளர்கள் செய்தித் தாள்கள்  மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய  படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அத்தகைய வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளும் தங்கள் வலைதளங்களில் இந்த  விவரங்களை வெளியிட வேண்டும்.  மேலும், வேட்பாளர் தேர்வு செய்யப் பட்ட 48 மணி நேரத்திற்குள் குற்ற வழக்கு விவ ரங்களை சமூக ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாளுக்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை மூன்று முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும். முழுமையான வழிகாட்டுதல்களை www.elections.tn.gov.in என்ற இணைய தளத்தில் காணலாம் என தலைமைத் தேர்தல்  அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் 44 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை, மார்ச் 21 - தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 2025-26 கல்வியாண்டில் மூன்று லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். தற்போதைய 2026-27 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை ஐந்து லட்சமாக உயர்த்த தொடக்கக் கல்வித் துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக மார்ச் மாதமே தொடங்கியது.  20 நாட்களில்... இதன்படி, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் 20 நாட்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 44,396 மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகள் குறித்த விவரங்களை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அங்கன்வாடிகளிலிருந்து சேகரித்து, இந்த சேர்க்கையை நடத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.