முந்தய பக்கம்

இடைநிற்றலை குறைக்க மாணவர்களுக்கு 425 மிதிவண்டிகள்

2 Mar 2026, 3:30 pm
இடைநிற்றலை குறைக்க மாணவர்களுக்கு 425 மிதிவண்டிகள்
<p><strong>இடைநிற்றலை குறைக்க மாணவர்களுக்கு 425 மிதிவண்டிகள்</strong></p> <p>&nbsp;சென்னை, மார்ச் 2- சென்னை ராயப்பேட்டையில், ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234 சார்பில் &ldquo;கிஃப்ட் ஆஃப் மொபிலிட்டி&rdquo; திட்டத்தின் கீழ் 425 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. &nbsp;கல்வி இடைநிற்றலைக் குறைக்கவும், எளிய பயணத்தை உறுதி செய்யவும் மெரிடியன் குளோபல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சமுக பொறுப்பு நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆளுநர் வினோத் சாராகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர் ஏ.கே.எஸ்.ஆர். முருகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார். ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முகமது ஆசிப் அலி கவுரவ விருந்தினராகப் பங்கேற்றார். சென்னை பல்லவா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இத்திட்டம் மாணவர்களின் கல்விப் பயணத்தை மேம்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram