சத்தீஸ்கரில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
26 Nov 2025, 3:40 pm
<p><strong>சத்தீஸ்கரில் 41 மாவோயிஸ்டுகள் சரண்</strong></p>
<p>தலைக்கு 1.19 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்ட 32 பேர் உட்பட 41 மாவோஸ்யிஸ்டுகள் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்ட அதிகாரி களிடம் சரணடைந்துள்ளனர். சரணடைந்த ஒவ்வொருவருக்கும் உடனடி நிதி உதவியாக 50,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்ட தாகக் கூறப்பட்டுள்ளது. 2024 ஜனவரி முதல் தற்போது சரணடைந்த 41 பேர் வரை மொத்தம் 790 மாவோயிஸ்ட்கள் அந்த மாவட்டத்தில் சரணடைந்துள்ள னர். இதே போல இக்காலக்கட்டத்தில் 202 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர்.1,031 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். காவல்துறை தகவலின்படி கடந்த 23 மாதங்களில் சத்தீஸ்கர் மாநிலம் முழு வதும் தளபதிகள் உட்பட 2,200 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் சரணடைந் துள்ளது தெரியவந்துள்ளது. </p>
