தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்

11 Apr 2026, 5:30 am
தமிழ்நாடு தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்

தமிழ்நாடு தேர்தல் களத்தில் 4,023 வேட்பாளர்கள்

சென்னை, ஏப்.10 - 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தாக்கல் செய்யப்பட்ட 7,599 மனுக்களில் 5,024 மனுக்கள் ஏற்கப்பட்டன. தேவையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 2,460 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 1,116 பேர் தங்கள் மனுக்களை தாமாகவே வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதன் விளைவாக இறுதி போட்டியாளர்களின் எண்ணிக்கை 4,023 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் மட்டுமே இருந்தமை குறிப்பிடத்தக்கது; இம்முறை வேட்புமனுத் தாக்கலிலும், இறுதி வேட்பாளர் எண்ணிக்கையிலும் கணிசமான உயர்வு காணப்படுகிறது. தொகுதிவாரியான வேட்பாளர் விவரங்களில், சென்னையில் 16 தொகுதிகளில் 419 பேரும், சேலத்தில் 11 தொகுதிகளில் 193 பேரும், ஈரோட்டில் 8 தொகுதிகளில் 188 பேரும், கோயம்புத்தூரில் 10 தொகுதிகளில் 183 பேரும், திருச்சியில் 9 தொகுதிகளில் 171 பேரும், கரூரில் 4 தொகுதிகளில் 166 பேரும் போட்டியிடுகின்றனர். கரூரில் அதிகபட்சம் தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்களைக் கொண்ட தொகுதியாக கரூர் சட்டமன்றத் தொகுதி திகழ்கிறது. இங்கு 79 பேர் களத்தில் நிற்கின்றனர். இதற்கு நேர்மாறாக, திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் மற்றும் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆகிய இரண்டு தொகுதியில் வெறும் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். உதகை, கூடலூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே வேட்பாளர்கள் உள்ளனர். ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களே இடம்பெற முடியும் என்பதால், பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்கள் தேவைப்படும். கரூர் போன்ற தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நட்சத்திர வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்தவரை, கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடியில் எடப்பாடி கே. பழனிசாமி, பெரம்பூரில் விஜய், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் நிற்கின்றனர். சிலிண்டர் சின்னம் மருத்துவர் ச.ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 30 தொகுதிகளிலும் ‘சிலிண்டர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன. இறுதிப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பேலட் பேப்பர் அச்சிடும் பணிகளும் துவங்கியுள்ளன. ஏப்ரல் 21 பிரச்சாரம் நிறைவு தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 21 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க 1950 உதவி எண் மற்றும் பறக்கும் படைகள் மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.