தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹரியானாவில் மூடுபனி காரணமாக 40 வாகனங்கள் மோதல் பலர் படுகாயம்; போக்குவரத்து முடங்கியது

14 Dec 2025, 3:45 pm
ஹரியானாவில் மூடுபனி காரணமாக  40 வாகனங்கள் மோதல் பலர் படுகாயம்; போக்குவரத்து முடங்கியது
<p><strong>ஹரியானாவில் மூடுபனி காரணமாக &nbsp;40 வாகனங்கள் மோதல் பலர் படுகாயம்; போக்குவரத்து முடங்கியது</strong></p> <p>சண்டிகர் நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. &nbsp;குறிப்பாக வடமாநிலங்களில் உறைபனி அளவிற்கு குளிர் இருப்பதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக் கின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலம், ரேவரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ் &nbsp;சாலையில் ஞாயிறன்று காலை அடர்த்தி யான மூடுபனி காராணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் பல வாக னங்கள் &nbsp;அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக &nbsp;மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் &nbsp;கொண்டதாகவும், பலர் படுகாயமடைந்த தாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகி லுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்திலும்... இதனிடையே, உத்தரப்பிரதேச மாநி லம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தேசிய &nbsp;நெடுஞ்சாலை 91இல் ஞாயிறன்று காலை &nbsp;சுமார் 7க்கும் மேற்கொண்ட வாகனங்கள் &nbsp;மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்த னர். விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட வில்லை என்று கிரேட்டர் நொய்டா காவல் &nbsp;துறை தெரிவித்தது. முடங்கியது போக்குவரத்து ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்க ளின் ஒரு சில இடங்களில் விபத்து காரண மாக சாலைப் போக்குவரத்து முடங்கியது. ஆனால் பெரும்பாலான இடங்களில் முன் &nbsp;னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் &nbsp;தில்லி நெடுஞ்சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.