கடலை மிட்டாய் மொத்த விலை 40% உயர்வு!
28 Jan 2026, 11:52 am
<p>நிலக்கடலை விலை கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கடலை மிட்டாயின் மொத்த விலையை 40 சதவீதம் உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.<br />
இதன்படி, இதுவரை 80 கிலோ எடை கொண்ட நிலக்கடலை மூட்டை ரூ.8,000க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது அதன் விலை ரூ.14,500 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக உற்பத்திச்செலவு அதிகரித்துள்ளதாக கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.<br />
இதன் விளைவாக, இதுவரை ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.180க்கு மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி அது ஒரு கிலோ ரூ.220க்கு மொத்த விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<br />
நிலக்கடலை உற்பத்தி குறைவு, போக்குவரத்து செலவு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளதாகவும், விலை உயர்வை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
