மூன்றரை நிமிடத்தில் 60 திருக்குறள் ஒப்புவித்து 4 வயது மழலை சாதனை
17 Jan 2026, 2:42 pm
<p><strong>மூன்றரை நிமிடத்தில் 60 திருக்குறள் ஒப்புவித்து 4 வயது மழலை சாதனை</strong></p>
<p>தென்காசி, ஜன.17- தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது மழலை திருக்குறளின் 60 பாடல்க ளை மூன்றரை நிமிடத்தில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இவர் தென்காசி மாவட்டம் திருவேங்க டம் தாலுகாவிற்கு உட்பட்ட செவல்குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார் கா.மகிழினி (வயது 4). இவர் 3 நிமிடம் 30 விநாடிகளில் 60 திருக்குறளை கோடை பண்பலை வானொ லியில் தெளிவாகவும் வேகமாகவும் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹைவுட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தக்கூடிய, 2026 ஆம் ஆண்டுக்கான சாதனையா ளர் விருதுக்கு மகிழினி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். இவரது தந்தை காளி ராஜ் தீக்கதிர் தென்காசி மாவட்ட செய்தி யாளர் ஆவார். தாயார் சங்கீதா. தமிழ்நாடு அரசின் தமிழக வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் சம்பந்தமாக ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி, என பலவகை போட்டிகளை நடத்தி ஆண்டுதோறும் பல பரிசுகளும், விருதுகளும் வழங்கி வருகிறது. இதற்கு தகுதி பெறுவோர் அவர்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள். மழலை கா.மகிழினியின் இந்த சாத னையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் மேலும் பல சாதனைகளை இந்த மழலை படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.</p>
