தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

11 Apr 2026, 5:30 am
4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

உ.பி., பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். புதுதில்லி: பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த மார்ச் 16ஆம் தேதி 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வில் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஹரி ஹரன், "இந்த சம்பவம் மிகக் கொடுமையானது. பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு 2 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தனார், குழந்தைக்குப் பதிலாக உயிரிழந்தது. குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி இந்த வழக்கைக் வெறும் கொலை வழக்காக மட்டுமே விசாரிக்க காவல்துறை முயன்றது. ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.

சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்தே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் பிறப்புறுப்பில் ஒரு மருங்கிய பொருள் திணிக்கப்பட்டதாக உடற்கூராய்வு அறிக்கை கூறுகிறது. சிறுமியின் தந்தை ஒரு தினக்கூலி தொழிலாளி. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, காவல்துறை அவர்களைத் தாக்கி, இந்தச் சம்பவம் குறித்து மவுனம் காக்குமாறு மிரட்டியுள்ளது.

காட்டம் அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் அமர்வு, "குற்றம் சாட்டப்பட்டவர் காவல்துறையினரைச் சுட்டதாகவும், பதிலுக்கு சுட்டதில் அவர் காயமடைந்ததாகவும் "என்கவுன்டர்" கதையை இந்த நீதிமன்றம் ஏற்க வேண்டுமா? காவல்துறையின் பிடியில் இருந்த ஒருவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது? என்கவுன்டர் தந்திரமாக கையாளப்பட்டு நீங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறீர்கள். எங்களை முட்டாளாக்க வேண்டாம்.

நீதிமன்றக் கண்காணிப்பிலான காலக்கெடுவுடன் கூடிய சிறப்பு விசாரணைக் குழு அல்லது மத்திய புலனாய்வு விசாரணை அவசியம். காசியாபாத் காவல் ஆணையர், நந்தகிராம் காவல் நிலைய அதிகாரி ஆகியோர் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தின் அடையாளத்தை எங்கும் வெளிப்படுத்தக் கூடாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.