தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

30 Dec 2025, 4:07 pm
திருச்சி விரைவு செய்திகள்

காலமானார்

சிவகங்கை, டிச.30- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சிவ கங்கை மாவட்ட பொருளாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் முத்துக்கருப்பனின் தந்தை மு.பெரியண்ணன் செவ்வாயன்று காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்ச்சி 31.12.2025 மாலை 3 மணி யளவில் சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் நடை பெறுகிறது.

கார் மின்கம்பத்தில் மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் காயம்

இராஜபாளையம், டிச.30- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் - தென்காசி  தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த  2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு காரில் கேரள மாநிலத்தில்  இருந்து இராஜபாளையம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். நள்ளிரவில் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால் சாலையின் வலது புறமுள்ள ஒரு மின்கம்பத்தில் மோதியது. இதில்  முன்பக்கம் அமர்ந்த இருவருமே பாதுகாப்பு கவசத்தால்  உயிர் தப்பினர். பின்னால் அமர்ந்திருந்த 2 பெண்கள் உட்பட நான்கு பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி னர். இதுகுறித்து இராஜபாளையம் தெற்கு மின்வாரிய உதவி பொறியாளர் விசாரணை மேற்கொண்டு மின்கம்பம்  சரி செய்யப்பட்டது.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

திருவில்லிபுத்தூர், டிச.30- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு நடை திறக்  கப்பட்டது. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பரமபத வாசல்  திறப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா கடந்த 20 ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கி யது. பின்னர் ஆண்டாள் ரங்கமன்னார் புறப்பாடாகி பெரிய  பெருமாள் சன்னதியில் உள்ள பத்து மண்டபத்தில் காட்சி யளித்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 5.30  மணிக்கு தமிழகத்தின் முதல் கோயிலாக திருவில்லிபுத்தூ ரில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பெரிய பெருமாள், ஆண்டாள் ரங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அரசு கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

இராமநாதபுரம், டிச.30- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்படும் போதைப் பொருள் எதிர்ப்பு குழு மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதா ரத்துறை இணைந்து மாணவ-மாணவிகளுக்கு உளவியல்  ரீதியான ஆலோசனை மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு  பற்றிய விழிப்புணர்வு முகாம் நிதியாளர் பரந்தாமன் தலை மையில் நடைபெற்றது. பேராசிரியரும் போதை பொருள் எதிர்ப்பு குழு  ஒருங்கிணைப்பாளருமான வே.மகேந்திரன் வரவேற்புரை யாற்றினார். இதில் மருத்துவர்கள் சஞ்சீவ் பாண்டியன், அப்சர் அலி, அவிநாசி, ஆங்கிலத்துறை தலைவர் ஆ.பால முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ் துறை  பேராசிரியை கோமதி தொகுத்து வழங்கினார். தமிழ்த் துறை பேராசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார்.

அரசு கல்லூரிகளில் அறிவுசார் போட்டி

திருவில்லிபுத்தூர், டிச.30- கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வையொட்டி திருக்குறள் தொடர்பான அறிவுசார் போட்டி கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு உருவகக் கட்டுரை, வினாடி வினா, விவாதமேடை என மூன்று போட்டிகள் நடத்தி  வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.4,500, இரண்டாம்  பரிசு ரூ.3,500, மூன்றாம் பரிசு ரூ.2,500 மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்படுகிறது.  இதனையொட்டி செவ்வாயன்று திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை  சார்பாக திருக்குறள் உருவகக் கட்டுரை தொடர்பாக தனி மனித ஒழுக்கம், நீர் மேலாண்மை மற்றும் ஆளுமை மேம்பாடு என்ற தலைப்பின் கீழ் 50க்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் பங்கு பெற்றனர்.  நிகழ்வின் தொடக்கமாக கணிதவியல் துறைத் தலை வரும் பொறுப்பு முதல்வருமான அமுதா தலைமை வகித்தார். தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். சிவகாசி அரசு கல்லூரி  தமிழ்த்துறை கெளரவ விரிவுரையாளர் இராஜேஸ்வரி மதிப்பீடு செய்தார்.  இதில் தமிழ்த் துறை பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அருப்புக்கோட்டை காந்திநகரில் விபத்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி

கணவர் காயம் – போலீசார் விசாரணை அருப்புக்கோட்டை, டிச.30- விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை காந்திநகர் பகுதியில், அடையா ளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் பய ணம் செய்த பெண் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த விபத்து குறித்து தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்  கொண்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவர் கரிமூட்டம் போடும்  தொழில் செய்து வருகிறார். இவர் செவ்வா யன்று அதிகாலை, தனது மனைவி பொன் னுத்தாயுடன் (50) இருசக்கர வாகனத்தில், கமுதியில் இருந்து விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோத னைக்காக புறப்பட்டுச் சென்றுள்ளார். வழிவிட்டான் வாகனத்தை ஓட்டி  சென்ற நிலையில், அவரது மனைவி பொன்  னுத்தாய் பின்னால் அமர்ந்திருந்தார். அருப்  புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, அவ்வழி யாக வந்த அடையாளம் தெரியாத வாக னம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பின்னால் அமர்ந்திருந்த பொன்னுத்  தாய் கீழே விழுந்த நிலையில், அந்த வாக னம் அவர்மேல் ஏறி இறங்கியதாக கூறப்படு கிறது. இதனால் அவரது தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் வழிவிட்டான் லேசான  காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல்நிலைய போலீசார், பொன்னுத்தாய் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்  சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை கண்டறிய போலீ சார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.