தொப்பூர் கணவாய் அருகே கோர விபத்து; 4 பேர் உயிரிழப்பு
16 Dec 2025, 6:10 pm
<p><strong>தொப்பூர் கணவாய் அருகே கோர விபத்து; 4 பேர் உயிரிழப்பு</strong></p>
<p>தருமபுரி, டிச.16- தொப்பூர் கணவாய் புதூர் பகுதி யில் லாரி ஒன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டி ருந்தது. இந்த லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் புதூர் பகுதியில் செவ்வாயன்று காலை வந்தபோது, திடீ ரென கட்டுபாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. உடனடி யாக அருகிலிருந்தவர்கள் விபத்தில் சிக் கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியாதால், தொப்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் சம்பவ இடத்தி லேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரி ழந்தனர். பொதுமக்கள் உதவியுடன் போலீசார், காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 5 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தரு மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரி ழந்தார். மேலும், 4 பேருக்கு மருத்து வர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ற னர். இவ்விபத்தில் உயிரிழந்தது ஈரோடு மாவட்டம், சங்கரியைச் சேர்ந்த முனியப் பன் (40), தருமபுரி மாவட்டம், மாதேமங்க லத்தைச் சேர்ந்த கலையரசி, சம்மனம் பட்டியைச் சேர்ந்த அருணகிரி ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சி யர் சதீஸ், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரி கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.</p>
