வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்திய 4 கட்டிடங்களுக்கு சீல்
18 Feb 2026, 3:04 pm
<p><strong>வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக பயன்படுத்திய 4 கட்டிடங்களுக்கு சீல்</strong></p>
<p>உதகை, பிப்.18- உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்று, வணிக ரீதியாக அனுமதியின்றி செயல்பட்டு வந்த நான்கு கட்டிடங்க ளுக்கு சீல் வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கவும், இயற்கை இடர்பாடு களை களையவும் மாஸ்டர் பிளான் சட் டம், மலையிட பாதுகாப்பு விதிமுறை கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் கொண்டு வரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் கட்டிடம் கட்டக்கூடாது. குடியிருப்பு பகு திகளில் தங்கும் விடுதிகள், ஓட்டல் கள் கட்டக்கூடாது. செங்குத்தான மலைச்சரிவில் கட்டிடங்கள் கட்டக்கூ டாது. குடியிருப்பு அனுமதி வாங்கி வணிக கட்டிடம் கட்டக்கூடாது. வணிக கட்டிடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டகூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. இருப்பினும் பலர் விதிமுறை களை மீறியும், உரிய அனுமதி பெறாம லும் கட்டிடங்களை கட்டுகின்றனர். மேலும், சிலர் வீடு கட்டுவதற்கான அனு மதி பெற்று, அதனை வணிகரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மாவட்ட நிர்வா கத்திற்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த ஒரு மாத காலமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனுமதியின்று கட்டப்பட்டுள்ள கட்டி டங்கள், வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்று அதனை வணிகரீதியாக பயன் படுத்தி வரும் கட்டிடங்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதனன்று உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பால கொலா மற்றும் உல்லத்தி ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், உதகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலு வலர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப் போது, உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நான்கு கட்டிடங்கள் வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதனை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து அந்த கட்டிடங்களுக்கு சீல் வைக் கப்பட்டது. மேலும் இதுபோன்று குடியி ருப்புகளுக்கான அனுமதி பெற்று வணிகரீதியாக பயன்படுத்தி வரும் கட்டி டங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரி வித்தனர்.</p>
<p> </p>
