பாலமலையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள், கருவிகள் கண்டுபிடிப்பு
4 Jan 2026, 5:55 pm
<p><strong>பாலமலையில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்குழிகள், கருவிகள் கண்டுபிடிப்பு</strong></p>
<p>கோவை, ஜன.4- கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை உச்சியில், சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கோப்பை வடிவக் கற்குழிகள் மற்றும் ஆயுதங் களைக் கூர்தீட்டும் கற்குழி களைத் தொல்லியல் ஆய் வாளர் முனைவர் ராஜேந்தி ரன் அடையாளம் கண்டுள்ளார். கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல் லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரி யரான முனைவர் ராஜேந்திரன், கடந்த 13 ஆண்டுகளாக தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது கல்லூரி யின் ‘Seed Money’ நிதி உதவியுடன் பால மலைப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தொல்லியல் சான்றுகள் வெளிச் சத்திற்கு வந்துள்ளன. அரிய கோப்பை வடி வக் கற்குழிகள் பாலமலை வனப்பகுதியில் இருளர் பழங் குடி மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அருகே, பழமையான அரங்கநாதர் ஆலயம் உள்ளது. இதன் அருகில் உள்ள 3 அடி உயரமும் 7 அடி நீளமும் கொண்ட சாம் பல் நிறப் பாறையில் 22-க்கும் மேற்பட்ட கோப்பை வடிவ கற்குழிகள் கண்டறியப்பட் டுள்ளன. இவை 3 முதல் 10 செ.மீ ஆழமும், 1 முதல் 7 செ.மீ அகலமும் கொண்டவை. இத் தகைய குழிகள் வானியல் குறியீடாகவோ அல்லது வழிபாட்டு இடமாகவோ இருந்தி ருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கல்லாயுதங்களை தேய்க்கும் குழிகள் இதன் அருகிலேயே கல்லாயுதங்களை கூர்மைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 12 தேய்ப்பு குழிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இது புதிய கற்கால மனிதர்கள் இப் பகுதியில் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதார மாகும். மேலும், பாறையின் மேற்பரப்பில் தானியங்களை அரைக்க அல்லது மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய 16 செ.மீ ஆழமுள்ள பெரிய குழி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், கூர்மையான மற்றும் உருளை வடிவக் கருவிகளை இன்றும் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரலாற்று முக்கியத்துவம் இது குறித்து முனைவர் ராஜேந்திரன் கூறு கையில், “மேற்கு மண்டலத்தில் புதிய கற் காலத் தரவுகள் சில இடங்களில் கிடைத் திருந்தாலும், கோப்பை வடிவக் கற்குழிகள் குறித்த பதிவுகள் இதுவரை இல்லை. ஏற்க னவே பாலமலையின் அடிவாரமான கோவ னூரில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமை யான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள் ளன. தற்போது கிடைத்துள்ள சான்றுகள், பாலமலைப் பகுதியில் வரலாற்றுக்கு முந் தைய காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்து வந் ததை உறுதிப்படுத்துகின்றன,” என்றார். இந்தக் கண்டுபிடிப்புகளை தொல்லி யல் ஆய்வாளர்கள் பூங்குன்றன், ஜெகதீசன் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளையினர் உறுதி செய்துள்ளனர். எனவே, தமிழக அரசு தொல்லியல் துறை இப்பகுதியில் விரி வான ஆய்வு மேற்கொண்டு, இந்த அரிய வரலாற்று சின்னங்களை ஆவணப்படுத் திப் பாதுகாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
