முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் 37.79 லட்சம் பேர் பயன்பெறுவர் விளிம்புநிலை மக்களுக்கும் தலா ரூ. 2,000 சிறப்பு நிதி! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
3 Mar 2026, 3:38 pm
<p><strong>முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் 37.79 லட்சம் பேர் பயன்பெறுவர் விளிம்புநிலை மக்களுக்கும் தலா ரூ. 2,000 சிறப்பு நிதி! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு</strong></p>
<p>சென்னை, மார்ச் 3 - விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும் கோடைக்கால சிறப்பு நிதி ரூ. 2,000, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட கோடைக்கால சிறப்புத் தொகை பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அதேபோல் சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த தாகவும் கூறியிருக்கும் முதலமைச்சர், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரூ. 2,000 மார்ச் மாத ஓய்வூதி யத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, பல்வேறு சமூகப் பாது காப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் 29 லட்சத்து 29 ஆயிரம் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு தலா ரூ. 3,200 வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 3,500 வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான மீன்பிடித் தடைக் காலத்திற்கான உதவித் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ. 8 ஆயிரம் விகிதம் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலைச் தொழிற்சாலைகள் வழியாக கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயி லைக்கு கிலோ ரூ. 2 ஆதார விலையாக மொத்தம் ரூ. 8.53 கோடி நிதி வழங்கப்படு வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
