சாலப்பாளையம் தோழர் எஸ்.பி.கந்தசாமி 35 ஆம் ஆண்டு நினைவு தினம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>சாலப்பாளையம் தோழர் எஸ்.பி.கந்தசாமி 35 ஆம் ஆண்டு நினைவு தினம்</strong></p>
<p>திருப்பூர், ஜன.27 - திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி வட்டம் சாலப்பா ளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் எஸ்.பி.கந்தசாமி யின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று கடைப்பி டிக்கப்பட்டது. ஊத்துக்குளி அருகே சாலப்பாளையத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பி.கந்த சாமி. கட்சியின் மூத்த தலைவர்கள் தலைம றைவு இயக்கப் பணியின்போது, அவர்களை பாதுகாத்தவர், அவர்களை காட்டி கொடுக்க ஊத்துக்குளி காவல்நிலையத்தில் காவலர் கள் அவரது மீசை மயிரைப் பிடுங்கி சித்ர வதை செய்தபோதும் உறுதியுடன் கட்சியை காத்தவர். ஊத்துக்குளி, பெருந்துறை தாலுகா பகுதியில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை திரட்ட பாடுபாட்டவர். கதித்தமலையில் அனைவருக்கும் இணை யாக பட்டியலின மக்களுக்கும் திருமணம் நடத்த வேண்டும் என்று கோவில் நுழைவு போராட்டம் உள்பட சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர் எஸ்.பி.கந்தசாமி. 1991ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி விபத்தில் எஸ்.பி.கே. உயிரி ழந்தார். இவரின் 35-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி திங்களன்று காலை 10 மணியளவில் ஊத்துக்குளி, சாலப்பாளையம் அவரது நினைவிடத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் ஜெ.கந்தசாமி தலைமையில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி கொடியை திருப் பூர் மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி ஏற்றி வைத் தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. பழனிசாமி ஆகியோர் நினைவுரை ஆற்றினர். திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், ஊத்துக்குளி தாலுகா செயலா ளர் சரஸ்வதி, பெருந்துறை தாலுகா செயலா ளர் அர்ச்சுனன் உட்பட திரளானோர், மாதர் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலமு ரளி நன்றி தெரிவித்தார். இதையடுத்து ஊத் துக்குளி ஆர்.எஸ்., கரைப்பாளையம் பகுதி களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p> </p>
