தியாகி தோழர் ஆதித்யவர்த்தன ஸ்ரீ 35-ஆம் ஆண்டு நினைவஞ்சலி
18 Jan 2026, 4:50 pm
<p><strong>தியாகி தோழர் ஆதித்யவர்த்தன ஸ்ரீ 35-ஆம் ஆண்டு நினைவஞ்சலி</strong></p>
<p>கிருஷ்ணகிரி, ஜன. 18- தோழர் ஆதித்யவர்த்தன ஸ்ரீயின் 35-ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் கிருஷ்ண கிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் அனு சோனையில் சனிக்கிழமை நடைபெற்றது. அனுசோனை கிராமத்தில் கந்து வட்டி மற்றும் கள்ளச்சாராயக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய ஆதித்யவர்த்தன ஸ்ரீ இப்பகுதியில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தை தோற்றுவித்து மக்கள் நல னுக்கான பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். இதனால் சமூக விரோதக் கும்பலின் எதிரியாக மாறிய அவரை அந்த கும்பலால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தியாகத்தை போற்றும் வகையில் , ஒவ்வோர் ஆண்டும் தியாகிகள் தினத்தன்று மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கம் சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி. ராஜா தலைமை தாங்கினார். முன்னதாக, தியாகி ஆதித்யவர்த்தன ஸ்ரீயின் இல்லத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்ற கட்சியினர், அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி. சுரேஷ் அஞ்சலி உரையாற்றினார். இந்நிகழ்வில் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர். சேகர், ஜி.கே. நஞ்சுண்டன், சி.பிரகாஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சி.பி. ஜெயராமன், ஆர். நடராஜன், லெனின் முருகன், ஸ்ரீதர் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் இருதயராஜ், அனுமப்பா, சீனிவாசன், பி. தேவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நஞ்சாரெட்டி, ஒன்றியச் செயலாளர் கணேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமரவடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
