தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நடப்பாண்டில் ரேசன் அரிசி கடத்திய 351 பேர் கைது

14 Dec 2025, 3:45 pm
நடப்பாண்டில் ரேசன் அரிசி கடத்திய 351 பேர் கைது

நடப்பாண்டில் ரேசன் அரிசி கடத்திய 351 பேர் கைது

ஈரோடு, டிச.14- ஈரோடு மாவட்டத்தில் நடப் பாண்டில் ரேசன் அரிசி கடத்திய 351 பேரை கைது செய்த போலீ சார், 135 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகை யில் தமிழக அரசு பொதுவிநி யோக திட்டத்தின் சார்பில், நியாய  விலைக்கடை மூலம் அத்தியாவ சிய பொருள்கள் விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநி யோகம் செய்யப்படும் ரேசன் பொருட்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இதில் ஈடுபடும் நபர்கள் மற்றும்  அதற்கு உடந்தையாக செயல்படுப வர்கள் மீது, துணை காவல் கண் காணிப்பாளர் ராஜபாண்டியன் தலைமையில் போலீசார் நடவ டிக்கை எடுத்து, கடத்தலுக்கு பயன் படுத்தப்படும் வாகனங்களைப் பறி முதல் செய்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் தற்போது வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் மொத்தம் 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட  குடிமைப்பொருள் வழங்கல் குற் றப்புலனாய்வு துறை போலீசார் கூறுகையில், ரேசன் அரிசி கடத்த லில் ஈடுபடுவர்களை கைது செய் தும், அவர்களிடமிருந்து ரேசன்  அரிசியை பறிமுதல் செய்தும் நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் இதில்  தொடர்புடைய 351 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்; அவர்களிடமி ருந்து 135 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 144 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 5 பேர், ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் ஏலம் விடப் பட்டு, ரூ.21 லட்சத்து 58 ஆயிரத்து  600 கருவூலத்தில் செலுத்தப்பட் டுள்ளது, என்றனர்.

கோழித் தீவனத்திற்காக ரேசன் அரிசி கடத்தல்

சேலம் மாவட்டம், மேட்டூரில் சனியன்று போலீசார் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தபோது சத்தானூர் பேரேஜ் அருகே ஈரோடு  நோக்கி வேகமாக சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 5 டன் ரேசன் அரிசியை கடத் திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியிலிருந்த ஈரோடு  மாவட்டத்தைச் சேர்ந்த தீனதயாளன் (33), ஜானகிராமன் (39) வைர மணி (29) ஆகியோரை போலீசார் பிடித்து,  ரேசன் அரிசி மற்றும் லாரியுடன் சேலம் உணவு கடத்தல் தடுப் புப் பிரிவு ஆய்வாளர் ஆனந்திடம் மேட்டூர் போலீசார் ஒப்படைத்த னர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், தங்கமாபுரிப்பட்ட ணம் தொட்டில்பட்டி மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடா கச் சென்று கிலோ ரூ.5க்கு ரேசன் அரிசியை வாங்கி நாமக்கல் பகுதி யில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு தீவனத்திற்காக கொண்டு  செல்லப்பட்டது தெரியவந்தது. பிடிபட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு  உணவு கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.